இரண்டாம் துர்லபராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் துர்லபராஜா
சகமான ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்ஆட்சி 784-809 பொ.ச
பின்னையவர்முதலாம் கோவிந்தராஜா
அரசமரபுகோபேந்திரராஜா
தந்தைமுதலாம் சந்திரராஜா

இரண்டாம் துர்லபராஜா (Durlabharaja II) (ஆட்சி சுமார் 998-1012 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

வரலாறு[தொகு]

துர்லப-ராஜா சகமான மன்னர் சிம்மராஜாவின் மகன். இவர் தனது சகோதரர் இரண்டாம் விக்ரகராஜாவுக்குப் பிறகு சகமானாவின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். விக்ரகராஜாவின் ஹர்ஷநாத் கோயில் இரண்டு சகோதரர்களை இராமர் - இலட்சுமணன் மற்றும் கிருட்டிணன் - பலராமனுடன் ஒப்பிடுகிறது. இவருக்கு சந்திரராஜா மற்றும் கோவிந்தராஜா என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர் (அதே பெயர்களைக் கொண்ட சகமான மன்னர்களுடன் குழப்பமடைய வேண்டாம்). [1]

துர்லபனின் ஆட்சிக் காலத்தின் பொ.ச.999 தேதியிட்ட இரண்டு கல்வெட்டுகள் பர்பத்சரில் உள்ள கின்சாரியா மற்றும் இராஜஸ்தானில் உள்ள சக்ராய் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சக்ராய் கல்வெட்டின் படி, இவர் மகாராஜாதிராஜா ("மன்னர்களுக்கெல்லாம் மன்னன்") என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். கின்சாரியா கல்வெட்டு இவர் துர்லங்கியா-மேரு என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறது, இது அவரது எதிரிகள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததைக் குறிக்கிறது. அசோசித்தனா அல்லது ரசோசித்தன மண்டலத்தை இவர் கைப்பற்றியதாகவும் கல்வெட்டு கூறுகிறது.[1] இது இன்றைய ரோத்தக் மாவட்டமாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் ஊகிக்கிறார். துர்லபன், தோமரா அரசனிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றியிருக்கலாம்.[2]

அஸ்திகுந்தி இராஷ்டிரகூட கிளையின் தலைவரான தவாலாவின் பொ.ச. 996 தேதியிட்ட கல்வெட்டில் இவரைப் பற்றிய ஒரு குறிப்பில் காண்கிறார். இந்த கல்வெட்டின் படி, துர்லபனால் தாக்கப்பட்ட மகேந்திரன் என்ற மன்னனுக்கு தவாலா உதவ வந்தான். துர்லபனின் போட்டியாளர்களான சௌலுக்கியர்களின் நிலப்பிரபுத்துவத்தில் இருந்த சமகால நாட்டுல சாஹமான அரசருடன் இந்த மகேந்திரனை அடையாளம் காணலாம். மகேந்திரனை விடுவிக்க தவாலா ராஜதந்திரம் மற்றும் பலம் இரண்டையும் பயன்படுத்தியதாக கல்வெட்டு கூறுகிறது. [1] வரலாற்றாளர் டி.ஆர். பண்டார்கரின் கூற்றுப்படி, தவாலாவின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள துர்லபராஜா வேறொரு அரசரான துர்லபராஜா சோலங்கியராக இருக்கலாம் . [3]

ஆரம்பகால இடைக்கால முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள், |அஜ்மீரின் ஆட்சியாளர் பொ.ச.1008 -இல் கசினியின் மகுமூத்துக்கு எதிராக ஆனந்தபாலனுக்கு ஆதரவாக இந்து ஷாகி அரசர்களின் கூட்டமைப்பில் சேர்ந்தார் என்று கூறுகின்றனர். ஆர்.பி. சிங் இந்த ஆட்சியாளரை துர்லபராஜா என்று அடையாளப்படுத்துகிறார். மகுமூத் இந்துப் பிரதேசங்களை மீண்டும் மீண்டும் சூறையாடுவதைத் தடுக்க கூட்டமைப்பு தவறிவிட்டது. [2]

துர்லபனின் துணை அதிகாரிகளில், மாதவன் என்ற மந்திரியும், தாதிசிக சாச்சா என்ற நிலப்பிரபுவும் அறியப்படுகிறார்கள். இவருக்குப் பிறகு இவரது சகோதரர் மூன்றாம் கோவிந்தராஜா ஆட்சிக்கு வந்தார். [2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Dasharatha Sharma 1959, பக். 33.
  2. 2.0 2.1 2.2 R. B. Singh 1964, பக். 122.
  3. R. B. Singh 1964, பக். 240.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_துர்லபராஜா&oldid=3407081" இருந்து மீள்விக்கப்பட்டது