மூக்கு இலை
Appearance
மூக்கு இலை (Nose-leaf) அல்லது இலை மூக்கு, பெரும்பாலும் பெரிய, ஈட்டி வடிவ மூக்கு ஆகும், இது பைலோசுடோமிடே, கிப்போசிடெரிடே மற்றும் ரைனோலோபிடே குடும்பங்களின் வௌவால்களில் காணப்படுகிறது. இந்த வௌவால்கள் தகவல் தொடர்புகொள்வதில் தகவல்களை மூக்கில் எதிரொலிப்பதால், இந்த மூக்கு-இலை எதிரொலி இருப்பிட அழைப்பை மாற்றியமைப்பதிலும் இயக்குவதிலும் சில பங்கை ஆற்றுவதாகக் கருதப்படுகிறது.[1][2]
மூக்கு-இலையின் வடிவம் வௌவால்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துவதற்கும் முக்கியமானதாக உள்ளது.[3] மேலும், மூக்கு-இலையின் வடிவம் வௌவால்களின் நடத்தையை அடையாளம் காண உதவுகிறது. உதாரணமாக, மூக்கினை இலை போன்று கொண்ட வௌவால் குடும்பங்களில், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இம்மூக்கு இலை உமிழ்வு கற்றைகளை மையப்படுத்துவது கண்டறியப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Macdonald, D., ed. (1984). The Encyclopedia of Mammals. New York: Facts on File. pp. 805. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87196-871-1.
- ↑ Wetterer, Andrea L. (2000). "Phylogeny of Phyllostomid Bats (Mammalia: Chiroptera): Data from Diverse Morphological Systems, Sex Chromosomes, and Restriction Sites". Bulletin of the American Museum of Natural History 248 (1): 1–200. doi:10.1206/0003-0090(2000)248<0001:POPBMC>2.0.CO;2. https://zenodo.org/record/5350042.
- ↑ Myers, Espinosa, Parr, Jones, Hammond, Dewey (2016). "Noseleaves". animaldiversity.org. The Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ Vanderelst, Dieter; Lee, Ya-fu; Geipel, Inga; Kalko, Elisabeth; Peremans, Herbert (2013). "The noseleaf of Rhinolophus formosae focuses the Frequency Modulated (FM) component of the calls" (in English). Frontiers in Physiology 4: 191. doi:10.3389/fphys.2013.00191. பன்னாட்டுத் தர தொடர் எண்:1664-042X. பப்மெட்:23882226.