முழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முழம் என்பது நீளத்தை அளக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஓர் அலகு ஆகும். இது ஒரு மனிதனின் முழங்கையின் நீள அளவைக் குறிக்கும். பொதுவாக ஒரு முதிர்ந்த மனிதரின் முழங்கை அளவே ஒரு முழமாகக் கருதப்பட்டது. முழங்கை என்பது அம்மனிதரின் கைமுட்டியிலிருந்து நடுவிரலின் நுனி வரை உள்ள நீள அளவு ஆகும். பண்டைத் தமிழர்கள் முழத்தை முழக்கோல் செய்து அளந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழக்கோல்கள் சிறுகோல் (இரு முழம் நீளம் கொண்டது), பெருங்கோல் (எட்டு முழம் நீளம் கொண்டது) என்று இருவகையில் உள்ளன.

ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற தமிழ்ப் பழமொழியிலிருந்து பண்டைத் தமிழ் போர் வீரர்களுக்கு எட்டு முழம் நீளம் வரை ஈட்டி வீசப் பயிற்சிக் கொடுக்கப்பட்டிருக்கக்கூடும் எனச் சொல்லலாம்.[1] இன்னும் தமிழ் நாட்டுப் பண்பாட்டுடையான வெள்ளை வேட்டியில் எட்டு முழம் மற்றும் பத்து முழம் தான் உள்ளன. பிற துணிமணிகள் எல்லாம் உலகளாவிய அளவை முறைகளில் தான் தற்போது அளவெடுக்கப்படுகின்றன.

2 சாண் = 1 முழம் = அடி (foot)[2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-10-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழம்&oldid=3481654" இருந்து மீள்விக்கப்பட்டது