முளைகட்டிய பயறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முளைகட்டிய பாசிப்பயறு

முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது. அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்[தொகு]

பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டாக்கும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது [1].. முளை கட்டிய பயறுகளில், புரதம் , கார்போவைதரேட்டு, உயிர்ச்சத்துக்கள், பீட்டாகரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. முளைகட்டிய பயறுகள் தினசரி உயிர்ச்சத்து தேவையை உறுதிசெய்யும்[2]. மேலும் இதில் உடலுக்கு நன்மை பயக்கும் எதிர் ஆக்ஸிகரனிகளும் உள்ளன.

முளைகட்டிய பயறுகளின் வகைகள்[தொகு]

  • முளைகட்டிய பாசிப்பயறு
  • முளைகட்டிய கொண்டைக்கடலை
  • முளைகட்டிய தட்டைப்பயறு
  • முளைகட்டிய உளுத்தம்பயறு
  • முளைகட்டிய சோயாஅவரை
  • முளைகட்டிய நரிப்பயறு
  • முளைகட்டிய பீன்ஸ்

பயன்கள்[தொகு]

முளைகட்டிய பயறினை பச்சையாகவோ அல்லது அவியல் செய்தோ எவ்வகையிலும் சாப்பிடலாம். இதனால் பலரது விருப்பத்தேர்வாகவும் இது உள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளைகட்டிய_பயறு&oldid=3417749" இருந்து மீள்விக்கப்பட்டது