உள்ளடக்கத்துக்குச் செல்

முற்றுப் புள்ளியா..?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முற்றுப் புள்ளியா..?
படிமம்:File:Muttrupulliyaa...? (Scars of Tomorrow).jpg
ஷெரின் சேவியர்
தயாரிப்புதி சோஷியல் ஆர்க்கிடெக்ட்ஸ்
திரைக்கதைஷெரின் சேவியர்
இசைசுரேன் விகாஷ்
நடிப்புஅன்னபூரணி
ஒளிப்பதிவுரவிவர்மன் நீலமேகம்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்தி சோஷியல் ஆர்க்கிடெக்ட்ஸ்
ஓட்டம்105.48
நாடுஇலங்கை, இந்தியா
மொழிதமிழ், ஆன்கிலம் மற்றும் சிங்களம்
ஆக்கச்செலவுUS$ 250,000

முற்றுப் புள்ளியா..? (Muttrupulliyaa) ஈழப் போருக்குப் பிந்தைய இலங்கையில் நான்கு நபர்கள் அவர்களது வாழ்க்கையைத் தேடும் கதையை கூறுகிறது. இது அவர்களின் அமைதியற்ற வாழ்க்கையை, வேதனையை, நிறைவேறாத ஆசைகளை, தினசரி போராட்டங்களையும் பற்றியும் பேசுகிறது. அவர்களுக்கு முன்னால் வந்த பலரைப் போலவே, அவர்களின் கௌரவத்தை இழந்த தமிழர்கள் போலவே, நீதியையும் நீடித்த சமாதானத்தையும் கற்பனை செய்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய கதை இது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை பற்றிய கதையை சொல்லும் முதல் ஆவணப்படமாகும். இலங்கையின் போருக்குப் பிந்திய வாழ்க்கை பற்றிய உண்மைக் கதை இது. இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர்; மற்றும் சென்னையிலிருந்து ஒரு இளம் பத்திரிகையாளர் இலங்கைக்கு பயணம் செய்யும் கதை இது.

ஒரு சிலர் தங்கள் துன்பத்தை இப்படத்தின் மூலம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு பெறுகிறார்கள். தங்கள் பட்ட காயங்கள், துயரங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவற்றைக் தவிர்ப்பதற்கு தங்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்யமுடியாதவர்கள் ஆகியவற்றைப் பற்றி இப்படம் பேசுகிறது. தயாரிப்பு நிறுவனம் இந்த விடயங்களை எதிர்கொள்வதில் உள்ள அபாயங்கள் காரணமாக தாங்கள் கைது செய்யப்படும் அபாயத்தை தவிர்க்க தங்களின் உண்மையை அடையாளத்தை மறைத்து ரகசியமாக படப்பிடிப்பு நடத்தினர். யாழ்ப்பாண திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1][2][3]

தணிக்கை

[தொகு]

இலங்கையின் பொது செயல்திறன் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு திரையிடப்பட அனுமதிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் இந்தியத் தணிக்கை வாரியத்தால் தடை செய்யப்பட்டது. பின்னர் படத்தின் தடை தடை செய்யப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒரு சில நிபந்தனைகளின் பேரில் எல்.டி.டி.ஈ கொடிகள் மற்றும் அதன் தலைவர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டியிருந்தது.[4][5]

குறிப்புகள்

[தொகு]
  1. "First Indigenous Feature Film On Tamils' Current Plight Premiered At Jaffna". P K Balachandran. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 September 2015. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  2. "Art through the Lens of War: 'Muttrupulliyaa…?'". International Policy Digest. 17 September 2014. Archived from the original on 29 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "First Indigenous Feature Film On Tamils' Current Plight Premiered At Jaffna". Asian Mirror. 19 September 2015. Archived from the original on 30 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Indian censors more worried about Sri Lankan film than Lanka's own!". Avantika Mehta. ஹிந்துஸ்தான் டைம்ஸ். 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  5. "Militarisation is a problem in the Tamil areas in Lanka' My film depicts the struggle for dignity by Tamils in Sri Lanka'". ரெடிப்.காம். 25 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றுப்_புள்ளியா..%3F&oldid=3670845" இலிருந்து மீள்விக்கப்பட்டது