மும்பை உலக வர்த்தக மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.வி.ஐ.ஆர்.டி.சி
MVIRDC
பொதுவான தகவல்கள்
வகைவணிகம்
இடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
நிறைவுற்றது1970
உயரம்
கூரை150 m (490 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை30[2]
ஐ.டி.பி.ஐ வங்கி கோபுரம்
IDBI Tower
பொதுவான தகவல்கள்
வகைவணிகம்
இடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம்
கூரை106 m (348 அடி)[3]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை26[1]

மும்பை உலக வர்த்தக மையம் (Mumbai World Trade Centre) தெற்கு மும்பையின் கஃப் பரேடு எனப்படும் வணிக மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக மையமாகும். மும்பை உலக வர்த்தக மையம் 1970 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் உலக வர்த்தக மையமாக கட்டப்பட்டது. இங்கு எம். விசுவேசரயா தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (எம்.வி.ஐ.ஆர்.டி.சி) [4] மற்றும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி [5]ஆகியவற்றுக்கான இரண்டு கோபுரங்கள் உள்ளன. எம்.வி.ஐ.ஆர்.டி.சி மையம் 1 என்றும் அழைக்கப்படும் 156 மீட்டர் உயரம் கொண்ட இம்மையம் 2010 ஆம் ஆண்டு வரை தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடம் என்ற சிறப்பைப் பெற்றிருந்தது. டார்டியோவில் 2010 ஆம் ஆண்டு 252 மீட்டர் உயரம் கொண்ட தி இம்பீரியல் என்ற இரட்டைக் கோபுரம் கட்டப்பட்டு மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டது. சபூர்சி பல்லோன்சி குழுமம் மும்பை உலக வர்த்தக மையத்தைக் கட்டியது. [6]

1998 ஆம் ஆண்டில், பிரகன் மும்பை மின்சார மற்றும் போக்குவரத்து நிறுவனம் உலக வர்த்தக மையத்தை அந்தேரியின் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கும் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையைத் தொடங்கியது. [7] மும்பை சத்ரபதி சிவாசி தொடருந்து நிலையத்திற்கும் உலக வர்த்தக மையத்திற்கும் இடையே மேலும் இரண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Emporis GmbH. "MRVDC, Mumbai, India". SkyScraperPage.com.
  2. "MVRDC | Buildings". Mumbai /: Emporis. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  3. SkyScraperPage.com. "IDBI Tower, Mumbai, India". Emporis.com.
  4. "About us - MVIRDC". பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
  5. "IDBI Towers | Buildings". Mumbai /: Emporis. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  6. "A quiet billionaire". இந்தியா டுடே. 27 August 2012. http://indiatoday.intoday.in/story/industrialist-pallonji-shapoorji-mistry-construction-business/1/213610.html. பார்த்த நாள்: 19 March 2015. 
  7. Mishra, Anshika (25 February 2003). "AC bus users to be given parking facility". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Mumbai). http://timesofindia.indiatimes.com/city/mumbai/AC-bus-users-to-be-given-parking-facility/articleshow/38510592.cms. பார்த்த நாள்: 18 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_உலக_வர்த்தக_மையம்&oldid=3316908" இலிருந்து மீள்விக்கப்பட்டது