தி இம்பீரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி இம்பீரியல்
முந்திய பெயர்கள்எசு. டி. கோபுரங்கள்
பொதுவான தகவல்கள்
வகைகுடியிருப்புப் பகுதி
இடம்எம்.பி.மில்சு வளாகம்
டார்தியோ, மும்பை, இந்தியா
ஆள்கூற்று18°58′15″N 72°48′46″E / 18.9709°N 72.8129°E / 18.9709; 72.8129ஆள்கூறுகள்: 18°58′15″N 72°48′46″E / 18.9709°N 72.8129°E / 18.9709; 72.8129
கட்டுமான ஆரம்பம்2005
நிறைவுற்றது2010
மேற்கோள்கள்
[1][2][3][4][5][6]

தி இம்பீரியல் (The Imperial) இந்தியாவில் உள்ள மும்பையில் கட்டப்பட்டுள்ள ஓர் இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டிட வளாகம் ஆகும். இந்தியாவில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மிக உயரமான கட்டிடங்கள் இவையாகும். தெற்கு மும்பையிலுள்ள குடியிருப்புப் பகுதியும் வர்த்தக மையமுமான டார்தியோவில் இக்கட்டிடங்கள் அமைந்துள்ளன. கட்டுமானம் முடிவடைந்து இக்கோபுரங்கள் 2010 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டன[7]

அமைவிடம்[தொகு]

தி இம்பீரியல் மும்பையின் டார்தியோ பகுதியில் அமைந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அபீசு என்ற ஒப்பந்தக்காரரால் வடிவமைக்கப்பட்ட இம்பீரியல் கோபுரங்கள், இன்றுவரையில் மிகவும் புகழ்மிக்க ஓர் அறியப்பட்ட திட்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது, மும்பையின் உயரமான கோபுரங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்பீரியல் இரட்டை கோபுரங்கள் முன்னாள் குடிசைப் பகுதி ஒன்றின் நிலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன, தற்போது பரவலாக நடைமுறையிலுள்ள ஆக்ரமிப்புப் பகுதியின் குடியிருப்பாளர்களுக்கு இலவச நிலம் வழங்குதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற நடைமுறைகள் முதன்முதலில் இங்குதான் நடைமுறைப்படுத்தப்பட்டன. இது போன்ற திட்டம் பின்னர் நகரம் முழுவதிலும் சேரி மற்றும் ஆலை நில மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் இந்தியா முழுவதிலும் பயன்படுத்தப்பட்டது. இத்திட்டம் வியத்தகு முறையில் வெற்றி பெற்றது, எதிர்காலத்தில் வரும் பலதிட்டங்களுக்கு இதுவொரு முன்னோடித் திட்டமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_இம்பீரியல்&oldid=2451883" இருந்து மீள்விக்கப்பட்டது