முபாரக் சா (சையிது வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முபாரக் சா
Muizz-ud-Din
முபாரக் சாவின் உலோக நாணயம்
26வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்21 மே 1421 – 19 பிப்ரவரி 1434
முன்னையவர்கிசிர் கான்
பின்னையவர்முகமது சா
அரசன்சாருக்
பிறப்புஅறியப்படவில்லை
இறப்பு19 பிப்ரவரி 1434
மதம்இசுலாம்
கோட்லா முபாரக்பூரில் உள்ள முபாரக் ஷாவின் கல்லறை

முபாரக் சா (Mubarak Shah) (பிறப்பு முபாரக் கான் ) ( ஆ. 1421–1434 ) டெல்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் இரண்டாவது சுல்தான் ஆவார். இவர் சையிது வம்சத்தை நிறுவிய கிசிர் கானின் மகனாவார்.

வரலாறு[தொகு]

இவர் தனது தந்தை கிசிர் கானுக்குப் பிறகு கி.பி. 1421 இல் அரியணை ஏறினார். முல்தானின் ஆளுநராக இருந்த கிசிர் கான், திறமையான நிர்வாகியாக அறியப்பட்டார். தைமூரின் படையெடுப்பு பயம் காரணமாக இவர் எந்த அரச பட்டத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இவர், முயிஸ்-உத்-தின் முபாரக் சா அல்லது முபாரக் சா என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். இவரது ஆட்சிக்காலத்தில் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு உள்ளூர் முஸ்லிம் தலைவரான ஜஸ்ரத் கோகர், சுல்தானகத்தின் பல பகுதிகளை ஆக்கிரமித்து இறுதியில் 1431 இல் தில்லி சுல்தானகத்தைக் கைப்பற்றினார். ஆனால் பின்னர், 1432 இல் ஏற்பட்ட ஒரு போரில் ஜஸ்ரத் கோகர் தோற்கடிக்கப்பட்டார். மேலும் தில்லியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், தில்லி சுல்தானுக்கு தனது பிரதேசத்தின் பெரும்பகுதியை விட்டுக்கொடுத்தார். எவ்வாறாயினும், இந்த வெற்றிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முபாரக் சா 1434 இல் கொலை செய்யப்பட்டார் . இவருக்குப் பின்னர் இவரது மருமகன் முகமது சா ஆட்சிக்கு வந்தார். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  • Jackson, Peter (2003). The Delhi Sultanate : a political and military history (1st ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521543293.
  • "Sayyid dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்).