முன்முடிவு
Jump to navigation
Jump to search
ஒன்றை நோக்கி தகுந்த விபரங்களை அறியும் முன்னர் அதை நோக்கி வரையப்படும் மதிப்பீடுகள் அல்லது முடிவுகள் முன்முடிவு அல்லது முற்சார்பு (prejudice) எனப்படுகிறது.[1] பல சந்தர்ப்பங்களில் முன்முடிவு அதை நோக்கி தப்பெண்ணங்களை உருவாக்க உந்துகிறது. பொதுவாக இது இனம், மதம், மொழி, பால், கலாசாரம், அரசியல், பாலியல் சார்பு போன்ற பக்கசார்பு நிலையினால் அல்லது தனிமனித ஒழுக்கலாற்று வேறுபாட்டால் விளையும் முன்கூட்டியே கொண்ட முடிவைக் குறிக்கும். மேலும் இச்சொல் 'தெளிவான அறிவுறுத்துதலால் மாறுபடாமல் இருக்கும் அறிவற்ற நடவடிக்கை'யைக் குறிக்கும்.
தமிழில் முன்முடிவை பாரபட்சம், ஓரவஞ்சனை, தப்பெண்ணம் என்றும் குறிப்பிடுவர்.