பக்கசார்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பக்கசார்பு அல்லது ஒருதலைச் சார்பு அல்லது கோடல் (bias) என்பது ஒரு குறிப்பிட்ட பார்வை, கருத்தியல், அல்லது முடிவு நோக்கி சார்பு நிலைப்பாட்டைக் குறிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் பக்கசார்பு ஒன்றைப் பற்றி ஆதாரபூர்வமாக, புறவய நோக்கில் தீர்மானிப்பதை தடுக்கிறது.

பக்கசார்பு பல வகைப்படும்.

  • உளவியல் பக்கசார்பு
  • பண்பாட்டு பக்கசார்பு
  • இனப் பக்கசார்பு
  • நிலப் பக்கசார்பு
  • பால் பக்கசார்பு
  • சமயப் பக்கசார்பு
  • மொழிப் பக்கசார்பு
  • அரசியல் பக்கசார்பு
  • ஊடக பக்கசார்பு
  • விளம்பரப் பக்கசார்பு

புள்ளியியலில்[தொகு]

புள்ளியியலில் தரவு தொகுத்தல், பகுப்பாய்வு, அறிவித்தல் ஆகியவற்றில் பக்கசார்பு அல்லது ஒருதலைச் சார்பு காணப்படலாம்.

ஊடகங்களில்[தொகு]

ஊடகத் துறையில் தான் சார்ந்துள்ள மதம், இனம், மொழி, கொள்கை போன்ற வேறுபாடுகள் காரணமாக நிருபர்கள், இதழாளர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்புண்டு.

மருந்துச் சோதனையில்[தொகு]

மருந்தியல் துறையில் ஒரு மருந்தை மருந்துப்போலியுடன் ஒப்பீட்டாய்வு செய்யும் போது ஆய்வாளர் முதலிலேயே எது மருந்து எனவும், எது மருந்துப் போலி எனவும் அறிந்திருப்பாராயின் அவரையும் அறியாமல் அவர் மருந்து நல்ல விளைவை ஏற்படுத்துவதாக அறிக்கை தர வாய்ப்பு உள்ளது. எனவே இரட்டைக் குருடாக்கம் (double blinding) எனும் முறை பின்பற்றப்படுகிறது. இதன் படி நோயாளிக்கும் ஆய்வாளருக்கும் சோதனையில் இருப்பது மருந்தா அல்லது மருந்துப் போலியா என்பது தெரியாமல் இருக்குமாறு செய்யப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கசார்பு&oldid=2742512" இருந்து மீள்விக்கப்பட்டது