முன்மாதிரி
ஒரு முன்மாதிரி (role model) என்பவர் ஒரு நபரின் நடத்தை அல்லது அவரது வெற்றி மற்றவர்களால், குறிப்பாக இளையவர்களால் பின்பற்றப்படுவதற்கு காரணமாக இருந்தால் அவர்கள் முன்மாதிரி எனப்படுவர்.[1] முன்மாதிரி எனும் சொல் சமூகவியலாளர் இராபர்ட் கே. மெர்டன் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது.[2][3] இவர் தனிநபர்கள் தங்களைத் தாங்களே தனிப்பட்ட சமூகப் பாத்திரத்தை ஆக்கிரமித்துள்ள நபர்களின் குறிப்புக் குழுக்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள் என்று அனுமானிக்கிறார், [4] இளம் ரசிகர்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அல்லது பொழுதுபோக்கு கலைஞர்களைப் பின்பற்றலாம் என்பதை உதாரணமாகக் கூறுகிறார்.
இவர்கள் தேசிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, சிலி அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பிரான்சினை தங்களது முதன்மையான முன்மாதிரியாகக் கொண்டிருந்தனர்,அவர்கள் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் ஜெர்மனியினை முன்மாதிரியாகக் கொண்டனர். [5] சுருக்கமாக, ஒரு முன்மாதிரி என்பது மற்றவர்களால் பின்பற்றப்பட வேண்டிய ஒரு நபர் ஆகும்.
தொழில் வாய்ப்பு மற்றும் தேர்வு மீதான தாக்கம்
[தொகு]வரலாற்றாசிரியர் பமீலா லயர்டின் கூற்றுப்படி, ஒரு நபரின் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரிகள் அவரது தொழில் வாய்ப்புகள் மற்றும் தேர்வுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நபர்கள் தாங்கள் அனுகும் விதத்தினைப் பொருத்து முன்மாதிரியின் தகுதிப் பொருத்தம் மாறுபடும்.எடுத்துக்காட்டாக, தாமஸ் மெலன், பிஎஃப் குட்ரிச் மற்றும் ஃபிரடெரிக் வெயர்கவுசர் போன்ற குறிப்பிடத்தக்கவர்கள் உட்பட, எண்ணற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் வெள்ளை வணிகர்களுக்கு பெஞ்சமின் பிராங்க்ளின் முன்மாதிரியாக செயல்பட்டார் என்று இலயர்ட் கூறுகிறார்.
பெற்றோரின் முன்மாதிரிகள் ஒரு நபரின் "கல்வி மற்றும் பயிற்சி நாட்டம், பணியின் சுய-திறன் மற்றும் தொழில்முனைவோர் வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பு" ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. [6]
பிரபலங்களின் முன்மாதிரிகள்
[தொகு]பரவலான ஊடக வளார்ச்சியினால் சில முன்மாதிரிகள் சர்வதேச அளவில் அறியப்பட்டனர். பிரபலங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ஊடக வெளிச்சம் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் இருவரிடமும் பிரபலங்கள் மீதான மனநிலையை மாற்றியது. ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சங்கம் 2008 இல் நடத்திய ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆசிரியர்களின் கணக்கெடுப்பின்படி, இளைஞர்கள் பெரும்பாலும் விளையாட்டு மற்றும் பரப்பிசை நட்சத்திரங்களை முன்மாதிரியாகத் தேர்ந்தெடுத்தனர்.உண்மைநிலை நிகழ்ச்சி மூலம் எளிதாக புகழைப் பெறலாம் என பரவலாக மக்கள் கருதுகின்றனர்.[7]
சமூகத்தின் முன்மாதிரிகள்
[தொகு]ரீட்டா பியர்சனின் கூற்றுப்படி, ஆசிரியர்கள், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதால், குழந்தைகளின் தேர்வுகளின் மீதும் செயல்பாடுகளின் மீதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், குழந்தைகளுடன் உணர்ச்சிபூர்வமான உறவுகளை உருவாக்குவதற்கு அவர்கள் விரும்பத்தக்கவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "Role model". பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
- ↑ Kaufman, Michael T. (24 February 2003). "Robert K. Merton, Versatile Sociologist and Father of the Focus Group, Dies at 92". New York Times. https://www.nytimes.com/2003/02/24/nyregion/robert-k-merton-versatile-sociologist-and-father-of-the-focus-group-dies-at-92.html.
- ↑ Calhoun, Craig J., ed. (2010). Robert K. Merton: Sociology of Science and Sociology as Science. New York: Columbia UP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-15112-2.
- ↑ Gerald Holton (4 December 2004). "Robert K. Merton - Biographical Memoirs". Proceedings of the American Philosophical Society 148 (4): 506–517. http://www.amphilsoc.org/sites/default/files/proceedings/480411.pdf. பார்த்த நாள்: 2007-08-07. "He developed a theory of the reference group (i.e., the group to which individuals compare themselves, which is not necessarily a group to which those individuals belong), and elaborated on the concepts of in-group and out-group".
- ↑ Sanhueza, Carlos (2011). "El debate sobre "el embrujamiento alemán" y el papel de la ciencia alemana hacia fines del siglo XIX en Chile" (PDF). Ideas viajeras y sus objetos. El intercambio científico entre Alemania y América austral. Madrid–Frankfurt am Main: Iberoamericana–Vervuert (in ஸ்பானிஷ்). pp. 29–40.
- ↑ Robert F. Scherer, et al. "Role Model Performance Effects on Development of Entrepreneurial Career Preference." Entrepreneurship: Theory & Practice 13.3 (1989): 53-71.
- ↑ "The Beckhams are the celebrities most children aspire to be, as celebrity culture increases its influence, says ATL". Association of Teachers and Lecturers. 14 March 2008. Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் February 21, 2011.
- ↑ Pierson, Rita (3 May 2013). "Every Kid Needs A Champion". www.ted.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-20.