முத்ரா வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்ரா வங்கி
வகைஇந்திய அரசின் பொது நிறுவனம் [1]
தலைமையகம்புதுதில்லி
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைவங்கித் துறை
உற்பத்திகள்சிறு, குறுந் தொழில் முனைவோர்க்கு கடன் வழங்கல்
மொத்தச் சொத்துகள்ரூபாய் இருபதாயிரம் கோடி

முத்ரா வங்கி (Micro Units Development and Refinance Agency) (MUDRA Bank), 20,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களின் தொழில் மேம்பாட்டிற்கும் மறுநிதி வசதிக்கும், பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்க, 8 ஏப்ரல் 2015 அன்று இதன் முதல் கிளையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் துவக்கி வைத்தார்.[2].

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிசு, தருண், கிசோர் என மூன்று வகையான திட்டங்கள் மூலம், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்க்கு கடன் வசதி வழங்கப்படுகிறது. [3] [4]

முத்ரா வங்கி மூலம் சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நிதியுதவி பெறலாம்.

தொடக்கத்தில் சிட்பி வங்கியின் (Small Industries Development Bank of India-SIDBI) துணை அமைப்பாக முத்ரா வங்கி இயங்கும். பின்னர் தன்னாட்சி நிதி நிறுவனமாக இயங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்ரா_வங்கி&oldid=2694074" இருந்து மீள்விக்கப்பட்டது