முதல் நீர்க் குழாய் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் நீர்க் குழாய் தாவரம்

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : சைலோட்டம் நூடம் Psilotum nudum

குடும்பம்  : சைலோட்டேசியீ (Psilotaceae)

இதரப் பெயர் : துடைப்பு பெரணி (Whisk-fern)

செடியின் அமைவு[தொகு]

சைலோட்டம் நூடம்

இச்செடி 50 செ.மீ. உயரம் வளரக்கூடியது. இதில் பலக்கிளைகள் உள்ளன. இவற்றில் பல செதில் இலைகள் உள்ளன. இலைப்பக்கத்தில் உருண்டையான, மஞ்சள் நிறத்தில் ஸ்பொராஞ்சியம் உள்ளது. இதிலிருந்து விதைத் துகள்கள் வெளியேறுகிறது. தாவரங்கள் தரையில் தோன்றி 400 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. தாவரங்களுக்குத் தேவையான உணவு, நீர் தாது உப்புகள் ஆகியவை மிகவும் அவசியம். அவற்றை எடுத்துச் செல்ல நீர்குழாய் அல்லது சாற்றுக்குழாய் மிகவும் அவசியம். இந்தச் சாற்றுக்குழாய் முதன் முதலில் இந்தச் செடியில்தான் தோன்றியது. இதன் பிறகே மிக உயர்ந்த தாவர வகைகள் தோன்றின.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இவை நியூசிலாந்து பகுதியில் வளர்கிறது. இது வெப்பப் பகுதியில் நன்கு வளர்கிறது. இவைகள் மரத்தின் மீதும், தரையிலும் வளரக்கூடியது. இவற்றின் தண்டு தரையில் கிடைமட்டாக உள்ளது. இவற்றிற்கு வேர்கள் கிடையாது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.