முதல் கின் பேரரசர் சமாதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முதல் கின் பேரரசர் சமாதி | |
---|---|
秦始皇陵 | |
![]() | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | லின்டாங் மாவட்டம், சியான்,சான்சி |
நாடு | சீனா |
ஆள்கூற்று | 34°22′54″N 109°15′14″E / 34.38167°N 109.25389°E |
அலுவல் பெயர் | முதல் கின் பேரரசர் சமாதி |
வகை | Cultural |
வரன்முறை | i, iii, iv, vi |
தெரியப்பட்டது | 1987 (11th session) |
உசாவு எண் | 441 |
State Party | China |
Region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும் |
முதல் கின் பேரரசரான கின் சி குவாங்கின் சமாதி லின்டாங் மாவட்டம், சியான்,சான்சி மாகாணத்தில் உள்ளது. கி.பி.246 தொடங்கி கி.பி.208 வரை, 38 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடைபெற்றது. இச்சமாதி கின் பேரரசின் தலைநகர் சியான்யாங்கை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நகரின் சுற்றளவு 2.5 கி.மீ (1.55 மைல்). வெளிநகரின் சுற்றளவு 6.3 கி.மீ (3.99 மைல்). அரசரின் கல்லறை கிழக்கு முகமாக உள்நகரின் தென்மேற்கில் உள்ளது. 76 மீட்டர் உயரமுள்ள குன்றின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. சமாதிக்குன்றுக்கருகே சுடுமண்சுதை படை இதற்குக் காவலாக அமைக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை.
வரலாறு[தொகு]
கின் பேரரசர், கி.பி.246 இல் தனது 13 ஆவது வயதில் அரியணை ஏறியதும் கட்டுமானப்பணி தொடங்கியது. கி.பி.221 இல் கின் ஆறு நாடுகளைக் கைப்பற்றி, ஒருங்கிணைந்த சீனாவை உருவாக்கி பேரரசர் ஆனதும் கட்டுமானப்பணி முடுக்கம்பெற்றது.
சிமா கியான் குறிப்பு[தொகு]
கின்னின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் சிமா கியான் குறிப்பிலிருந்து,
ஒன்பதாவது மாதத்தில் லீ குன்றில் கட்டுமானம் ஆரம்பித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 7,00,000 பேர் கடுமையாக உழைத்தனர். வெண்கலத்தால் கல்லறை உருவானது. அதிகாரிகளுக்கான மாளிகைகளும் கண்கவர் கோபுரங்களும் அமைத்தனர். பொக்கிசங்களால் மாளிகைகளை நிரப்பினர். அனுமதியின்றி நுழைந்தவர்களை அம்பெய்தி கொன்றனர். பாதரசத்தால் நதிகளையும் கடலையும் அமைத்தனர். விண்மீன் தொகுதிகளையும் நிலத்தையும் மாதிரி செய்தனர். மீன் எண்ணெயில் எரியும் விளக்குகளை அமைத்தனர். வாரிசில்லாத பேரரசரின் மனைவிகள் இறந்த அரசருக்குத் துணையாக உள்ளே செல்லுமாறு இரண்டாம் பேரரசர் ஆணையிட்டார். புதையில் மர்மம் காக்கும்பொருட்டு கல்லறையில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் உள்ளே அனுப்பட்டனர். இறுதி சடங்குகள் நிறைவுற்றதும் உள்வழி மூடப்பட்டு, வெளிவழி அடைக்கப்பட்டது. குன்றின்மீது மரங்கள் நடப்பட்டு முழுதும் மறைக்கப்பட்டது.
கலகம்[தொகு]
குடியானவர்களின் கலகம் மூண்டபோது, சாங் கான் 7,00,000 பணியாளர்களையும் கலவரத்தை ஒடுக்க அனுப்பினார். கட்டுமானம் சில காலம் பாதிக்கப்பட்டது. சியாங் யூ கல்லறையை சூரையாடியாதாகவும் பின் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனால் சில பகுதிகள் எரியூட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. எனினும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதையும் தற்காலத்திய ஆய்வுகள் உணர்த்தவில்லை.
அகழ்வுப்பணிகள்[தொகு]
கின் சி குவாங் கல்லறை வளாகம், அவரது பேரரசு, அரண்மனை ஆகியவற்றின் சிறு நகலாகும். கல்லறைக்குன்றைச் சுற்றி, இரு சுற்றுச்சுவர்கள் உள்ளன. உட்சுவர் மற்றும் வெளிசுவருக்கிடையே பல குழிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.
சுதைமண்சிற்பங்கள்[தொகு]

உள் சுற்றுச்சுவருக்குள்ளே மேற்கில் வெண்கல தேரும் குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர்கள், அதிகாரிகளின் சுதைமண்சிற்பங்கள் உள்ளன. உட்சுவருக்கும் வெளிசுவருக்கிமிடையேயுள்ள பகுதியில் காவலர்கள், அவைக் கலைஞர்கள் ஆகியோரின் சுதைமண் சிற்பங்கள்,கல்லாலான கவச உடைகள் உள்ளன. வடக்கில் வெண்கல வாத்து, நாரை, அன்னம் கொண்ட அரச பூங்காவும் இசைக்குழுவும் உள்ளன. வெளிச்சுவருக்கு வெளியே அசல் குதிரைகளும் பழக்குநர்களும் கொண்ட அரச லாயம் உள்ளது. மேற்கில் கட்டாய பணியில் இறந்தத் தொழிலாளர்களின் பெரும் இடுகாடு உள்ளது. சுடுமண்சுதைச்சிற்பப் படை 1.5 கிமீ தொலைவில் கிழக்கில் உள்ளது. கல்லறைக்குன்று அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை. எனினும், வேறுபல தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.