முதலுதவி கருவிப் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரெஞ்சு இராணுவத்தின் முதலுதவி கருவிப் பெட்டி.

முதலுதவி கருவிப் பெட்டி (First aid kit) என்பது துணைக்கலப் பொருட்களையும், கருவிகளையும் சேகரித்து வைத்து முதலுதவி அளிப்பதற்குப் பயன்படுவது ஆகும்[1]. முதலுதவி கருவிப் பெட்டிகள் என்பது யார் என்ன காரணத்திற்காக தயாரிக்கின்றனர் என்பதைப் பொறுத்து வேறுபட்ட பொருட்ளைக் கொண்டு உருவாக்கப்படலாம். அது அரசாங்கம் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான வேறுபட்ட அறிவுரைகள் அல்லது சட்டங்களைப் பொறுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபடலாம்.

உங்கள் பணியிடங்களில் தேவைப்படும் முதலுதவி வசதிகளின் வகைகள் பின்வருவனவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன:

 • நீங்கள் வாழும் மாநிலம் அல்லது பிரதேசத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்;
 • நீங்கள் பணிபுரியும் தொழில்துறையின் வகை (சுரங்கத்தொழில் போன்ற தொழில்துறைகள் தனிச்சிறப்பான வழிமுறைகளுடன் விவரிக்கப்பட்ட குறிப்பிட்ட தொழில்துறை விதிமுறைகளைக் கொண்டிருக்கலாம்);
 • உங்கள் பணியிடங்களில் விளையக்கூடிய தீங்குகளின் வகை;
 • உங்கள் பணியிடங்களில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை;
 • உங்கள் பணியிடம் பரவியிருக்கின்ற வேறுபட்ட இடங்களின் எண்ணிக்கை;
 • அருகாமையில் கிடைக்கும் உள்ளூர் சேவைகள் (மருத்துவர்கள், மருத்துவமனை, முதலுதவி வண்டி).

முதலுதவி வசதி உங்கள் பணியிடங்களின் தேவைகளை கண்டிப்பாக நிறைவுச் செய்ய வேண்டும். வசதிகள் என்பது முதலுதவி கருவித் தொகுப்புகளை அல்லது ஓய்வறைகளை உள்ளடக்கியது.

உங்கள் பணியிடங்கள் சுழற்சி பணிமுறைமாற்றங்களில் இயங்கினால், ஒவ்வொரு பணிமுறைமாற்றங்களிலும் ஒரு முதலுதவி தெரிந்த நபரை நியமித்திருக்க வேண்டும். உங்கள் பணியிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முதலுதவி நியமனங்கள் கொண்டிருப்பது பணியிடத்தில் ஏதாவது ஒரு பணிமுறைமாற்றத்தின்போது ஒருவர் வரவில்லை என்றாலும் மற்றொருவர் பார்த்துக்கொள்ள முடிவதும் மிகச்சிறந்ததே.

பொதுவாக உள்ளடக்கமாக கட்டுத் துணிகள், CPR (இதய இயக்க மீட்பு சுவாசம்) இயக்குவதற்கான சுவாசத் தடைகள் போன்ற இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் சில மருந்துகளையும் கொண்டிருக்கலாம்.

அமைப்பு[தொகு]

முதலுதவி கருவிப் பெட்டிகள் கிட்டத்தட்ட எந்த மாதிரியான கொள்கலனிலும் தயாரிக்கப்படலாம். மேலும் இது வணிக ரீதியாக தயாரிக்கப்படுகின்றனவா அல்லது தனிமனிதர்களால் பொருத்தப்படுகின்றனவா என்பதைப் பொறுத்தது. தரமான கருவிப் பெட்டிகள் பெரும்பாலும் நீடித்த பிளாஸ்டிக் பெட்டிகள், துணிப் பைகள் அல்லது சுவற்றில் பொருத்தக்கூடிய பேழைகளில் வருகின்றன. பயன்பாட்டைப் பொறுத்து கொள்கலனின் வகையானது மாறுபடும். அவை சிறு தோற்பைகள் முதல் தோளில் சுமந்து செல்லும் சாக்குப்பைகள் வரையில் பல்வேறு அளவுகளைக் கொண்டுள்ளன.

அனைத்து கருவித் தொகுப்புகளும் தூய்மையாகவும் உள்ளடக்கங்களை பாதுகாப்பாகவும் அழுகலற்றதாகவும் வைக்க நீர்புகா கொள்கலன்களைக் கொண்டிருக்குமாறும் பரிந்துரைக்கப்படுகின்றன.[2] கருவிப் பெட்டிகளை வழக்கமாக பரிசோதித்து அதில் உள்ள பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தாலும் அல்லது காலாவதியாகியிருந்தாலும் அவற்றை மாற்ற வேண்டும்.

தோற்றம்[தொகு]

சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO), யாருக்காவது முதல் உதவி தேவைப்பட்டால் அவர்கள் எளிதாக அடையாளம் கண்டு பயன்படுத்தும் வகையில் முதலுதவி கருவிப் பெட்டிகள் பச்சை நிறத்தில் வெள்ளைச் சிலுவையுடன் அமைந்திருக்கவேண்டும் என்ற தரநிலையை அமைத்திருக்கின்றது.

அதே நேரத்தில் சர்வதேச தரநிர்ணய அமைப்பு, சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பச்சைநிறப் பின்புலம் மற்றும் வெள்ளைநிறச் சிலுவையைப் பயன்படுத்துமாறும், சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வெள்ளைநிறப் பின்புலத்தில் சிவப்பு நிறத்தினாலான சிலுவையைப் பயன்படுத்துமாறும் கூறுகின்றது. ஆனால் இந்த குறியீட்டை யாராவது பயன்படுத்துவதினால் அது செஞ்சிலுவைக்கான சர்வதேசக் குழு (ICRC) அல்லது அதற்கு துணையான நிறுவனங்கள் சார்ந்த ஜெனீவா மாநாட்டின் நெறிமுறைகளின்படி சட்ட விரோதமானதாகலாம். அந்த செஞ்சிலுவையை அனைத்து உறுப்பு நாடுகளிலும் தனது பாதுகாக்கப்பட்ட குறியீடாக குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளது. ஒரு சில விதிவிலக்குகள் வடஅமெரிக்காவில் இருக்கின்றன. அங்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அதன் தயாரிப்புகளில் வணிக முத்திரையாக செஞ்சிலுவையைப் பயன்படுத்தும் அனுமதியைக் கொண்டிருக்கின்றது. மேலும் அக்குறியீட்டைப் பயன்படுத்த 1887 ஆம் ஆண்டில் பதிவும் செய்திருந்தது.

சில முதலுதவி கருவிப் பெட்டிகள், பொதுவாக அவசர மருத்துவ சேவைகளுடன் தொடர்புடைய வாழ்வின் நட்சத்திரம் என்ற உருவத்தையும் கொண்டிருக்கலாம். ஆனால் அவை அந்த சேவையானது வழங்கக்கூடிய சரியான பராமரிப்பு முறையினைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

உள்ளடக்கம்[தொகு]

ஒட்டும் தன்மையுள்ள கட்டும் துணிகள், முதலுதவி கருவிப் பெட்டியில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்று.
பிளாஸ்டிக் சாமணம்
நவீன முதலுதவி கருவிப் பெட்டியில் பயன்படுத்தியதும் எறியக்கூடிய கையுறைகள் பெரும்பாலும் காணப்படுகின்றன.

சாதாரணமான சில்லறை விற்பனை வழிகளில் வணிக ரீதியாகக் கிடைக்கும் முதலுதவி கருவிப் பெட்டிகள் சிறிய காயங்களுக்கான சிகிச்சையை வழங்கும் நோக்கத்தையே மரபாகக் கொண்டிருக்கின்றன. ஒட்டும் தன்மையுள்ள கட்டும் துணிகள், வழக்கமான வலிநிவாரண மருந்து, கட்டுத் துணி மற்றும் குறைந்த தரமுடைய தொற்று நீக்கி உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த உள்ளடக்கங்கள் ஆகும்.

செயற்பாடுகளைப் பொறுத்து குறிப்பிட்ட இடர்பாடுகளுக்கான அல்லது தொடர்புடைய வகையில் சிறப்பான முறையில் பல்வேறு நாடுகள், வாகனங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு ஏற்ற முதலுதவி பெட்டிகள் இருக்கின்றன. ஓர் உதாரணமாக, கடல் சார்ந்த பொருட்கள் விற்கப்படும் கடைகளில் மரக்கலங்களில் பயன்படுத்தப்படும் முதலுதவிப் பெட்டிகள் கடல் சார்ந்த நோய்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியுள்ளது.

நுரையீரல் காற்றுக்குழாய், சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம்[தொகு]

முதலுதவியானது ABCகளை சிறந்த சிகிச்சையின் அடிப்படையாகக் கருதுகின்றது. இதன் காரணத்தால், பெரும்பாலான நவீன வணிக முதலுதவி கருவித் தொகுப்புகள் (அவை வீட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கத் தேவையில்லை), இதய இயக்க மீட்பு சுவாசத்தின் ஒரு பகுதியான செயற்கை சுவாசம் நிகழ்த்துவதற்குப் பொருத்தமான நோய்த் தொற்றுத் தடுப்புகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டுகள்:

 • பையில் வைக்கும் முகமூடி
 • முகக் கவசம்

மேம்பட்ட முதலுதவி கருவித் தொகுப்புகள் பின்வருவன போன்ற பொருட்களைக் கொண்டிருக்கலாம்:

 • வாய்த்தொண்டை காற்றுக்குழாய்
 • நாசித்தொண்டை காற்றுக்குழாய்
 • பை இதழ் முகமூடி
 • கைமுறை உறிஞ்சி அல்லது உறிஞ்சுதல் அலகு

தீங்கு உண்டுபண்ணும் காயங்கள்[தொகு]

இரத்தப்போக்கு, எலும்பு முறிவு அல்லது தீக்காயங்கள் போன்ற பலத்த காயங்களுக்கான மருத்துவத்திற்குப் பயன்படுவதே பெரும்பாலான முதலுதவி கருவிப் பெட்டிகளின் பிரதான நோக்கமாகும். கட்டுத் துணிகள் மற்றும் காயம் சுற்றும் துணிகள் போன்றவை பெரும்பாலான கருவிப் பெட்டிகளில் காணப்படுகின்றன.

 • ஒட்டும் தன்மையுள்ள கட்டுத் துணிகள் (உதவிப் பட்டை, ஒட்டக்கூடிய பிளாஸ்திரிகள்) - உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்கென வடிவமைக்கப்பட்டவை. அவை மூட்டுகள் போன்ற பகுதிகளில் ஒட்டப் பயன்படும்.
  • இரட்டுத் துணிவகை — கொப்பளம் போன்றவற்றுக்கான மருத்துவம் மற்றும் தடுப்புக்காக
 • காயம் சுற்றும் துணிகள் (களங்கமற்றது, நேரடியாக காயங்களுக்குப் பயன்படுத்தக்கூடியது)
  • தூய்மையான கண் பட்டைகள்
  • களங்கமற்ற கட்டும் துணிப் பட்டைகள்
  • ஒட்டும் தன்மையற்ற டெஃப்ளான் அடுக்கைக் கொண்டுள்ள, தூய்மையான பற்றிக்கொள்ளும் தன்மையற்ற பட்டைகள்,
  • பெட்ரோலேட்டம் கட்டும் பட்டைகள், உறிஞ்சும் மார்பு காயங்களுக்கானது காற்றுப்புகாத இவை ஒட்டும் தன்மையற்ற கட்டுப்போடுவதற்கும் பயன்படுகிறது
 • கட்டுத் துணிகள் (மென் கட்டுகளைப் பாதுகாப்பதற்கானவை, அவை தூய்மையானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை)
  • உருளை கட்டுத் துணிகள் - திரவத்தை உறிஞ்சக்கூடிய, காற்றுப் புகக்கூடிய மற்றும் பெரும்பாலும் மீள்தன்மை கொண்டவை
  • மீள்தன்மை கொண்ட கட்டுத் துணிகள் - சுளுக்குக்குப் பயன்படுவது, மற்றும் அழுத்தம் கொடுக்கும் கட்டுத் துணிகள்,
  • ஒட்டும் தன்மையுள்ள, மீள்தன்மை கொண்ட உருளை கட்டுத் துணிகள் (பொதுவாக 'வெட் ராப்' என அழைக்கப்படுகின்றன) - மிகச் செயதிறனுள்ள அழுத்தம் கொடுக்கும் கட்டுத் துணிகள் அல்லது நீடித்தவை, நீர்ப்புகாப் பாதுகாப்புள்ள கட்டுத் துணிகள்
  • முக்கோணக் கட்டுத் துணிகள் - தொங்கு பட்டைகளாகவும், இரத்தப்போக்கை நிறுத்தும் கட்டுத் துணிகளாகவும், மூங்கில் சிம்புகளை இணைக்கும் நாண்களாகவும் மற்றும் பல விதமாகவும் பயன்படுகின்றன.
 • பட்டாம்பூச்சி நெருக்கப் பட்டைகள் - காயங்களை மூடப் பயன்படும் தையல்கள் போலப் பயன்படுகின்றன. பொதுவாக நன்கு குணமாகக் கூடிய வகையில் மறுமொழியளிக்கும் நோய்த்தொற்றை தவிர்க்கும் அடைத்துவைக்கப்பட்ட சுத்தப்படுத்தப்படாத காயங்களில் மட்டுமே உள்ளடக்கப்படுகின்றன.
 • காயங்களைக் கழுவவும், கண்களிலிருந்து அயல் பொருட்களை வெளியேற்றவும் பயன்படுத்தப்படும் உப்புக்கரைசல்.
 • சோப்பு - இரத்தப்போக்கு நின்றவுடன், மேலோட்டமான காயங்களை சுத்தப்படுத்த நீருடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
 • சீழ்ப்பெதிர்ப்பி சிராய்ப்புகளிலும் காயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நோய்த்தாக்கத்தின் ஆபத்தைக் குறைப்பதற்காக தெளிக்கப்படுகிறது அல்லது தேய்க்கப்படுகிறது. சீழ்ப்பெதிர்ப்பிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் அழுக்கான காயங்களை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.
 • தீக்காயத்திற்கான கட்டுத் துணி, இது குளிர்ந்த ஜெல்லில் நனைத்த கிருமிகளற்ற பட்டையே ஆகும்.
 • ஒட்டக்கூடிய பட்டை, ஒவ்வாமை குறைவானது
 • முதலுதவி கருவித் தொகுப்பில் இரத்தப்போக்கு நிறுத்திகளும் இருக்கலாம். இராணுவ மற்றும் உத்தி சார்ந்த நோக்கத்திற்கான செயல்களின் போதான தேவைகளின் போது பயன்படுத்தப்படும் தொகுப்புகளில் இவை இருக்கும். அதிக இரத்தப்போக்கைத் தடுக்கப் பயன்படுகின்றன.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம்[தொகு]

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் அல்லது PPE இன் பயன்பாடு முதலுதவி கருவிப் பெட்டிகளுக்கேற்ப மாறுபடும். அது அதன் பயன்பாடு மற்றும் வாய்ப்புள்ள நோய்த்தாக்கும் ஆபத்து போன்றவற்றைப் பொறுத்தது. பொதுவான PPE இல் மேலே கூறியவாறு செயற்கைச் சுவாசத்திற்கான கூடுதல் சாதனங்களும் இருக்கலாம். ஆனால் பொதுவாக நோய்ப்பாதிப்புக் கட்டுப்பாட்டுக்கானவற்றில் பின்வருவன அடங்கும்:

 • கையுறைகள், கலப்பு நோய்ப்பாதிப்பைத் தடுப்பதற்காக இவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு,கழிக்கப்படுகின்றன
 • காப்புக் கண்ணாடி அல்லது பிற கண் பாதுகாப்பு உபகரணம்
 • காற்று வழியே பரவக்கூடிய நோய்த்தாக்கும் ஆபத்தைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை முகமூடி அல்லது N95 முகமூடி (சில சமயங்களில் மருத்துவர்களுக்கு பதிலாக நோயாளிகளுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த தேவைக்கு, முகமூடியில் வெளிச்சுவாச குழாய் இருக்கக்கூடாது)
 • மேலங்கி

கருவிகளும் உபகரணமும்[தொகு]

 • காயக் கத்திரி, துணியை வெட்டவும் மற்ற பொதுத் தேவைக்குமானது
 • கத்தரிக்கோல் அதிகம் பயன்படுவதில்லை எனினும் இதில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்படுகின்றன
 • சாமணங்கள்
 • தீமூட்டி, இது சாமணங்களையும் இடுக்கிகளையும் கிருமிநீக்கம் செய்யப் பயன்படுகின்றன
 • ஆல்கஹால் அட்டைகள் உபகரணத்தையோ அல்லது கிழிந்த தோலையோ கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன. இது சில நேரம் காயங்களிலிருந்து அன்னியப் பொருள் அல்லது சிதைந்த திசுக்களை அகற்றப் பயன்படுகிறது. இருப்பினும் சில பயிற்சி பெற்ற மருத்துவர்கள், இது அழித்துவிடும் சில செல்களில் பின்னர் பாக்டீரியா வளரக்கூடும் என்பதால் இதைப் பரிந்துரைப்பதில்லை
 • நீரூற்றிக் கழுவும் மருந்தேற்றுக் குழல் - இது சிறு செருகு வடிகுழாயுடன் அமைந்த முனையைக் கொண்டுள்ளது. இது கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீர், உப்புக் கரைசல் அல்லது நீர்த்த அயோடின் கரைசல் ஆகியவற்றைக் கொண்டு காயங்களைச் சுத்தப்படுத்த உதவுகிறது. பொங்கிவழியும் திரவமானது மாசுக்களையும் அன்னியப் பொருள்களையும் கழுவி வெளியேற்றுகிறது.
 • டார்ச் (தெரிப்பு ஒளி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது)
 • உடனடி வினை புரியும் வேதியியல் குளிர்ப்பொருள்
 • ஆல்கஹால் துடைப்பான் (கைச் சுத்திகரிப்பான்) அல்லது நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்து கைத் துடைப்பான்கள்
 • வெப்பநிலைமானி
 • பாதுகாப்புப் போர்வை (லேசான மெல்லிய ப்ளாஸ்டிக் தகட்டுப் போர்வை, "அவசர உதவிப் போர்வை" என்றும் அழைக்கப்படுகிறது)
 • பேனா விளக்கு

மருந்துகள்[தொகு]

குறிப்பாக பொதுமக்களிடையே பயன்படுத்துவதற்கானது எனும்பட்சத்தில், முதலுதவி கருவிப் பெட்டியில் கூடுதலாக மருந்துகளும் இருப்பது என்பது முரண்பட்ட கருத்தாக உள்ளது, எனினும், தனிப்பட்ட அல்லது குடும்பத்திற்கான முதலுதவி கருவித் தொகுப்பில் பொதுவாக சில மருந்துகள் இருக்கின்றன. பயன்பாட்டின் வகையின் அடிப்படையில் முதலுதவி கருவித் தொகுப்பில் பின்வரும் சில முக்கியமான மருந்துவகைகள் இருக்கும்: சம்பளத்திற்குப் பணிபுரியும் முதலுதவி சேவகர்கள் அல்லது பணியமர்த்தப்பட்ட முதலுதவி சேவகர்கள், பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களுக்காக வைத்திருக்கும் உயிர்காக்கும் மருந்துகள், பெரும்பாலும் தனிநபர் முதலுதவி கருவித் தொகுப்பிலும் சில நேரம் பொதுமக்களுக்கு உரியவற்றிலும் காணப்படும் மருந்துகளான வலிநிவாரணிகள் மற்றும் கடைசியாக, வழக்கமாக தனிநபர் தொகுப்பில் மட்டுமே காணப்படக்கூடிய மருந்துகளான நோய்க்குறி சார்ந்த நிவாரண மருந்துகள்.

உயிர்காக்கும் மருந்துகள்
 • ஆஸ்பிரின்[2], முதன்மையாக மைய மருத்துவ நெஞ்சு வலிக்கு, உறைதலுக்கு எதிரான மருந்தாகப் பயன்படுகிறது
 • எப்பிநெப்பிரின் இயக்குநீர் சுயமாகச் செலுத்திக்கொள்ளும் ஊசி (Epipen என்பது வர்த்தகப் பெயர்) - பெரும்பாலும் கோடைகால முகாம் போன்ற சமயங்களில் அரிதாகப் பயன்படுவதற்காக முதலுதவி கருவிப் பெட்டிகளில் வைத்துக் கொள்ளப்படுகிறது. இது காப்புப்பிறழ்வு அதிர்ச்சிகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.
வலி நிவாரணிகள்
 • பாரசிட்டமால் (அசிட்டமினோஃபென் என்றும் அழைக்கப்படுகிறது) இது மிகவும் பொதுவான வலிநிவாரணி மருந்துகளுள் ஒன்றாகும். இது மாத்திரையாகவோ அல்லது திரவ மருந்தாகவோ கிடைக்கிறது
 • ஐப்யூப்ரோஃபன், நேப்ரோக்ஸன் போன்ற அழற்சி நீக்க வலி நிவாரணிகள் அல்லது பிற NSAIDகள் சுளுக்கு மற்றும் திரிபு போன்றவற்றைத் தீர்க்கும் மருந்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படலாம்
 • கோடீன் என்பது வலி நிவாரணியும் பேதி நிவாரணியுமாகும்
நோய் அறிகுறி நிவாரணம்
 • லோபரமைடு போன்ற வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மருத்துவம் - வயிற்றுப்போக்கால் நீர்வற்றல் ஏற்பட்டு குழந்தைகளைக் கொல்லும் குறிப்பாக நெடுந்தொலைவான பகுதி அல்லது மூன்றாம் உலக நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
 • வாய்வழி உடல் நீரேற்ற உப்புகள்
 • டிபென்ஹைட்ரமைன் போன்ற ஹிசுட்டமின் எதிர்ப்பி
 • விஷமுறிவுச் சிகிச்சைகள்
  • கிளர்வுற்ற கரி போன்ற உட்கவர்தல்
  • வாந்தியை ஏற்படுத்துவதற்கு இப்பகாக் சிரப் போன்ற வாந்தி ஊக்கிகளைப் பயன்படுத்துதல், இருப்பினும் இப்போது முதலுதவிக் கையேடுகள் வாந்தி ஏற்படுத்துவதற்கு எதிராக அறிவுறுத்துகின்றது.
 • மென்மை உப்புகள் (அம்மோனியம் கார்பனேட்)
தற்போதைய மருத்துவங்கள்
 • பென்சல்கோனியம் குளோரைடு, நியோமைசின், பாலிமைசின் பி சல்பேட் அல்லது பாசிட்ரசின் துத்தநாகம் உள்ளிட்டவை நோய்க் கிருமிகளை அழிக்கும் தைலம், நீர்மம், ஈரமான துடைப்பான் அல்லது தெளிப்பு ஆகும்.
  • பொவிடன் அயோடின் என்பது திரவம், துடைக்கும் குச்சி அல்லது சிறு துண்டு வடிவில் இருக்கும் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்தாகும்
 • சோற்றுக்கற்றாழை ஜெல் - தீப்புண், வேனிற் கட்டி, அரிப்பு மற்றும் தோல் வறட்சி உள்ளிட்ட பெரும்பாலான தோல் வியாதிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது; இது மூன்றடுக்கு ஜெல்லிற்கு மாற்றாக புண்களை ஈரப்பதத்தில் வைக்கவும் கட்டும் துணிகள் ஒட்டிக்கொள்வதிலிருந்து தடுக்கவும் பயன்படுகின்றது
 • தீப்புண் ஜெல் - குளுமை உண்டாக்கியாகவும் பெரும்பாலும் லிடோகைன் போன்ற மிதமான நோய்க் கிருமி அழிக்கும் மருந்தாகவும் தேயிலைமர எண்ணைய் போன்று ஒரு நோய்க் கிருமி அழிக்கும் மருந்தாகவும் குளிர்விக்கும் கருவி அடிப்படையிலான ஒரு ஜெல்லாக செயல்படுகிறது
 • அரிப்பு எதிர்ப்புக் களிம்பு
 • பூஞ்சை எதிர்ப்பு களிம்பு
 • பென்சாயின் டிஞ்சர் - பெரும்பாலும் தனித்தனியாக உறையிடப்பட்ட துடைக்கும் குச்சி வடிவில் தோலைப் பாதுகாக்கவும் ஒட்டக்கூடிய பட்டாம்பூச்சி பட்டைகள் அல்லது ஒட்டும் தன்மையுள்ள கட்டும் துணிகளுக்கு உதவவும் பயன்படுகின்றது.

திடீர்ப் பயன்கள்[தொகு]

முதலுதவியில் அதன் வழக்கமான பயன்பாடுகள் தவிர, பெரும்பாலான முதலுதவி உருப்படிகள் உயிர் பிழைத்தல் சூழ்நிலைகளில் மாறுபட்ட பயன்களையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆல்கஹால் பட்டைகள் மற்றும் பெட்ரோலிய ஜெல் அடிப்படையிலான களிம்புகள் அவசர நேரத்தில் தீயை மூட்டுவதற்கு உதவியாகப் பயன்படுத்தப்படும். பின்னர் அவை குறிப்பிட்ட இயந்திரச் சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்ட உய்வுப்பொருளாகப் பயன்படுத்தப்படும். மேலும் ஒட்டக்கூடிய பட்டைகள் மற்றும் கட்டும் துணிகள் பழுதுநீக்கப் பயன்படுத்தப்படும். வனப்பகுதி அல்லது உயிர்பிழைத்தல் சூழலில் பயன்படுத்துவதற்கான தொகுப்பின் உருப்படிகளை தேர்ந்தெடுக்கும்போது இந்த மாற்றுப் பயன்பாடுகள் முக்கிய கவனத்திற்குரியவையாக இருக்கும். ஒரு மாற்று என்பது உயிர்பிழைப்பு கருவிப் பெட்டிகள் மற்றும் சிறிய உயிர்பிழைப்பு கருவிப் பெட்டி போன்ற கூடுதல் கருவிகளுடன் கூடிய கருவிப் பெட்டிகளின் பயன்பாடாகவும் இருக்கலாம்.

காயப் பை/முதலுதவி அளிப்பவர் பை[தொகு]

அவசர முதலுதவி அளிப்பவர்கள் காயப் பை அல்லது முதலுதவி அளிப்பவர் பை என்றழைக்கப்படும் மிகவும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ கருவித் தொகுப்பைப் பயன்படுத்துகின்றனர். இது வணிக ரீதியில் கிடைக்கும் முதலுதவி கருவிப் பெட்டிகளை விட உயர்ந்த தரத்தில் அதிக அளவிலான எண்ணிகையான மூலப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன.

பணியிட முதலுதவிக் கருவிப் பெட்டி[தொகு]

அமெரிக்காவில் வேலைசார்ந்த பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு மேலாண்மை (OSHA) அமைப்பானது, காயம்பட்ட பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு கிடைக்கும்படி முதலுதவி உபகரணங்களை அனைத்து பணித் தளங்கள் மற்றும் பணியிடங்களில் வைக்க வேண்டும் என்று கோருகின்றது [3]. மரம் வெட்டுதல் போன்ற சில துறைகளுக்கான நெறிமுறைகளை வழங்குகின்ற போது, [4] முதலுதவிக் கருவிப் பெட்டியின் உள்ளடக்கங்களைக் குறிப்பிடுவதில் பொதுவான நெறிமுறைகளில் பற்றாக்குறை நிலவுகின்றது. இது நெறிமுறைகள் பணியின் ஒவ்வொரு வழிமுறைகளையும் புரிந்துகொள்கின்றது. வெவ்வேறு பணிகள் வெவ்வேறு வகையான காயங்களையும் வேறுபட்ட முதலுதவித் தேவைகளையும் கொண்டுள்ளன. இருப்பினும், கட்டாயமில்லாத பிரிவில் [5] , OSHA நெறிமுறைகள் ANSI/ISEA விவரக்கூற்றுகள் Z308.1 ஐ [6] முதலுதவிக் கருவிப் பெட்டியின் குறைந்தபட்ச உள்ளடக்கங்களுக்கான பரிந்துரையின் அடிப்படையாகக் குறிக்கின்றது. நவீன முதலுதவி கருவிப் பெட்டி தகவலுக்கான மற்றொரு ஆதாரமாக அமெரிக்க வனச் சேவை விவரக்கூற்று 6170-6 உள்ளது [7]. இது வேறுபட்ட அளவிலான குழுக்களுக்கு சேவை நோக்கைக் கொண்ட பல வேறுபட்ட அளவினையுடைய கருவிப் பெட்டிகளின் உள்ளடக்கங்களைக் குறிப்பிடுகின்றது. இதுதான் அவை இருக்க வேண்டிய வழி ....

வரலாற்று முதலுதவிக் கருவிப் பெட்டிகள்[தொகு]

முதலுதவி மற்றும் உயிர்காப்பு வழிமுறைகள் மேம்பட்டதாலும், பொது உடல்நலச் சிக்கல்களின் தன்மை மாறியிருப்பதாலும், முதலுதவிக் கருவிப் பெட்டிகளின் உள்ளடக்கங்களும் இந்த இணக்கங்களையும் நிபந்தனைகளையும் பிரதிபலிக்க மாறுபடவேண்டும். எடுத்துக்காட்டாக, முதலுதவிக் கருவிப் பெட்டிகளுக்கான முந்தைய அமெரிக்க ஒருங்கிணைந்த விவரக்கூற்றுகள் [8] [9] கீறல்/உறிஞ்சுதல் வகை பாம்புக்கடி கருவிப் பெட்டி நோய்க் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினியையும் உள்ளடக்கியது. பாம்புக்கடி பற்றி கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது போன்று, இந்த வகையான பாம்புக்கடி கருவிப் பெட்டிகள் பரிந்துரைக்கப்படவில்லை. கிருமிநாசினியை US FDA பாதரச விஷத்தன்மையுடையதாக கருதுவதால் அங்கீகரிக்கவில்லை. பிற எடுத்துக்காட்டுகளில் CPR முகக் கவசங்கள் மற்றும் குறிப்பிட்ட உடல் திரவங்கள் தடைகள், CPR இல் வழிநடத்த மற்றும் எச்.ஐ.வி போன்ற ரத்தத்தால் பரவக்கூடிய நுண்ணுயிர்க் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கு உதவவும் நவீனக் கருவிப் பெட்டிகளில் உள்ளடங்கியுள்ளன. நவீன CPR 1960 ஆம் ஆண்டு வரை பிரபலமாகாமல் இருந்தது. எச்.ஐ.வி 1983 ஆம் ஆண்டுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தது.க

மேலும் காண்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

 1. Windale, Rose. "Saving lives with Emergency Medicine". healthzine.org. 2008-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 First Aid Manual 8th Edition. St John Ambulance, St Andrews First Aid, British Red Cross. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7513-3704-8. 
 3. 29 CFR 1910.151 (1998-06-10). "Occupational Safety and Health Standards: Medical services and first aid". 2006-08-28 அன்று பார்க்கப்பட்டது.
 4. 29 CFR 1910.266 App A (1995-09-08). "Occupational Safety and Health Standards: First-aid Kits (Mandatory)". 2006-08-28 அன்று பார்க்கப்பட்டது.
 5. 29 CFR 1910.151 App A (2005-01-05). "Occupational Safety and Health Standards: Appendix A to § 1910.151 -- First aid kits (Non-Mandatory)". 2006-08-28 அன்று பார்க்கப்பட்டது.
 6. ANSI/ISEA (2009-05-12). "ANSI/ISEA Z308.1-2009, American National Standard - Minimum Requirements for Workplace First Aid Kits and Supplies". 2009-09-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. U.S. Department of Agriculture Forest Serivce (2006-01-25). "6170-6H, Kits, First Aid" (PDF). 2009-08-25 அன்று பார்க்கப்பட்டது.
 8. GG-K-391A (1954-10-19). "Kit (Empty) First-Aid, Burn-Treatment and Snake Bite, and Kit Contents (Unit-Type)". 2011-07-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 9. GG-K-392 (1957-04-25). "Kit, First Aid (Commercial Types), and Kit Contents". 2011-07-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

புற இணைப்புகள்[தொகு]