முதலாம் கொங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெலநாட்டு சோடர்கள்
வெலநாடு துர்ஜய தலைவர்கள்
முதலாம் கொங்க சோடர் 1076–1108
முதலாம் ராஜேந்திர சோடர் 1108–1132
இரண்டாம் கொங்க சோடர் 1132–1161
இரண்டாம் ராஜேந்திர சோடர் 1161–1181
மூன்றாம் கொங்க சோடர் 1181–1186
பிரித்திவிஸ்வர சோடர் 1186–1207
மூன்றாம் ராஜேந்திர சோடர் 1207–1216

முதலாம் கொங்கா (Gonka I ) என்பவர் ஒரு தெலுங்கு அரசர். இவர் வேலநாட்டி சோடர்களில் முதல் அரசர் ஆவார். இவர் 1076 முதல் 1108 வரை ஆண்டார்.

கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராக கொண்டு ஆண்ட சாளுக்கிய சோழனான முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவரது மகன் மும்முடி வர்மன் ஆகியோரின் கீழ் கொங்கா வேங்கியின் ஆளுநராக பணியாற்றினார். மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான போர்களிலும், மேலைச் சாளுக்கியர்களின் அணியில் இணைந்திருந்த கலிங்கர் மற்றும் சக்ரகுடர் ஆகியோருக்கு எதிராக இவர் போராடினார். இவர் சோழ மூல ஸ்தம்பா (சோழ சாம்ராஜ்யத்தின் தூண்) என்ற பட்டத்தை பெற்றிருந்தார். இவரது இராச்சியம் தெற்கில் குண்ட்லகம்மா முதல் மேற்கில் திரிபுராந்தகம் வரையிலான பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது.

குறிப்புகள்[தொகு]

  • துர்கா பிரசாத், கி.பி 1565 வரை ஆந்திராவின் வரலாறு, பி.ஜி. வெளியீட்டாளர்கள், குண்டூர் (1988)
  • தென்னிந்திய கல்வெட்டுகள் - http://www.whatisindia.com/inscription/
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கொங்கா&oldid=3057652" இருந்து மீள்விக்கப்பட்டது