முக்ராந்த் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்ராந்த் ராய் (Mukrand Rai) முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் 1657 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் நவீன உத்தரப் பிரதேசத்தின் பரேலி பிராந்தியத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஆவார். பரேலி நகரத்தை பலப்படுத்தி கட்டினார். 'நவீன' நகரமான பரேலியின் அடித்தளம் 1657 ஆம் ஆண்டு இவரால் கட்டப்பட்டது. [1]

பரேலி நகரம் 1537 ஆம் ஆண்டில் கத்தேரியா ராஜபுத்திரரான பாசுடியோவால் நிறுவப்பட்டது. 1568 ஆம் ஆண்டு குசைன் குலி கான் என்பவர் 'பரேலி மற்றும் சம்பல்' ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்று எழுதும் புடாயுனி என்பவரால் இந்த நகரம் முதன்முறையாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரிவுகள் மற்றும் வருவாய் "தோடர் மால் மூலம் நிர்ணயிக்கப்பட்டது" 1596 ஆம் ஆண்டு அபுல் பசலால் பதிவு செய்யப்பட்டது. 1658 ஆம் ஆண்டு, பரேலி புதாவுன் மாகாணத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BAREILLY - SNIPPETS FROM THE PAST
  2. "Introduction". Library.upenn.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்ராந்த்_ராய்&oldid=3807541" இலிருந்து மீள்விக்கப்பட்டது