முக்தா வெங்கடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தா வெங்கடேஷ்
பிறப்புமே 1902
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு2003 (101 வயதில்)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஓவியர், கவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிக்கலான மலர் ஓவியங்கள்
வாழ்க்கைத்
துணை
வெங்கடேஷ்

(1902-2003), இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியரும் கவிஞருமாவார். சிக்கலான மலர் ஓவியங்களுக்காக மிகவும் பிரபலமான இவர், மைசூரின் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரான மாதவ சாஸ்திரியின் மகனான, வெங்கடேஷ் என்ற ஓவியரை திருமணம் செய்துள்ளார்.[1]

வாழ்க்கை[தொகு]

முக்தா வெங்கடேஷ், 1902 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் மீனாட்சி மற்றும் ஏ. மாதவையா ஆகியோருக்கு மகளாக முத்துலட்சுமி என்ற பெயரில் நான்காவது குழந்தையாகப் பிறந்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான இவரது தந்தை பல்வேறு சமூகக் காரணங்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்துள்ளனர். மேலும்  சிறுவயதில், தன் தந்தையின் இலக்கியப் பேரார்வம் மற்றும் முற்போக்குக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட முக்தா,[2] மைசூர் ரயில்வேயில் பணிபுரிந்த எம். வெங்கடேசனை திருமணம் செய்துள்ளார், அத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

முக்தா, திருமணத்திற்கு முன்பதாக நீண்ட காலம் லண்டனில் தங்கியிருந்த போது, அங்கு ப்ளீன் ஏர் மாஸ்டர் சேவியர் வில்லிஸிடம் ஓவியக்கலையை கற்றுள்ளார்.

கலைத்திறமை[தொகு]

ஓவியரும் ஆங்கில மொழி கவிஞருமான முக்தா வெங்கடேஷ், 1922 ஆம் ஆண்டில் லண்டனிலில் இருந்து, மைசூர் திரும்பியுள்ளார். அதன் பின்னர் மைசூரில் உள்ள தனது வீட்டின் பரந்த தோட்டத்தை விட்டு எங்கேயும் வெளியேராமல் தனது 101 வயது வரை ஓவியம் வரைந்து வாழ்ந்துள்ளார், முக்தா வெங்கடேஷின் கலைப்படைப்பு தனித்துவமான மற்றும் விரிவான மலர் வடிவங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வெளிப்புற நிலப்பரப்புகளை மட்டுமே வரைந்த முக்தா, பின்னர் தனது கவனத்தை பூக்களிடம் மாற்றி சிக்கலான, நேர்த்தியான வண்ணக்கலவையில் வரைய ஆரம்பித்துள்ளார். ஓவியம் மட்டுமல்லாமல்,  பூ வேலைப்பாடுகள் மற்றும் ஊசி வேலைகளிளும் திறமை வாய்ந்த முக்தா, தனது வாழ்நாளின் இறுதி வரையிலும் ஓவியங்கள் வரைந்து வந்துள்ளார். ஓவியத்தை ஆழ்ந்த தியான பயிற்சி என்றும் "நான் வரையும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் பார்ப்பதைப் பற்றிய எனது உணர்வை காகிதத்தில் எவ்வாறு உருவாக்குவது என்ற முயற்சியில் நான் தொலைந்துவிட்டேன். அதனால் வீட்டுப் பிரச்சனைகள் பெரிதாக தெரிவதில்லை" என்றும் கூறியுள்ளார்.

முக்தாவின் பூக்களின் ஓவியங்கள் தங்களுக்கென ஒரு மென்மையான கனவுக் காட்சியைப் பெற்றுள்ளன. அதன் நேர்த்தியான வண்ணங்கள், ஒவ்வொரு நிழலும், இதழ்களின் ஒவ்வொரு சுருளும், வயது, இதழ்களில் உள்ள காயங்கள் மற்றும் கறைகள், வண்ணங்களின் தெளிவு போன்றவை என மொத்தமாக அற்புதமாக வரையப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Mukta Venkatesh passes away". Hinduonnet.com. 2003-10-20. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Perunkulam Picaresque: A. Madhaviah - A Family Portrait". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-18. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  3. "Undeterred by age". தி இந்து. 2001-07-01. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_வெங்கடேஷ்&oldid=3741911" இலிருந்து மீள்விக்கப்பட்டது