முகம்மது முனீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது முனீர்
Muhammad Munir
محمدمنیر
பாக்கித்தான் 2ஆவது தலைமை நீதிபதி
பதவியில்
29 சூன் 1954 – 2 மே 1960
நியமிப்புமாலிக் குலாம் முகமது
முன்னையவர்நீதிபதி அப்துல் இரசீத்து
பின்னவர்முகம்மது சகாபுதீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1895
அமிருதசரசு, Punjab, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1979 (அகவை 83–84)
முன்னாள் கல்லூரிலாகூர் அரசு கல்லூரி பல்கலைக்கழகம்

முகம்மது முனீர் (Muhammad Munir) பாக்கித்தானின் இரண்டாவது தலைமை நீதிபதியாக 1954 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1895 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்தார்.

பின்னணி[தொகு]

ஒரு காக்கிசாய் பசுத்துன் குடும்பத்தில் முனீர் பிறந்தார். லாகூர் அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். எல்எல்பி பெற சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். 1921 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ர் 1922 ஆம் ஆண்டில் லாகூர் சென்றார்.[1]

தொழில்[தொகு]

முனீர் 1937 ஆம் ஆண்டில் பஞ்சாபின் மாநில உதவி அரசுத் தலைமை வழக்குரைஞர் 1940 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள நீதித்துறை இருக்கைக்கு உயர்த்தப்பட்டார். இவரும் நீதிபதி தின் முகம்மதும் 1947 ஆம் ஆண்டில் பஞ்சாப் எல்லை ஆணையத்தில் அகில இந்திய முசுலீம் லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னர் அடுத்த ஆண்டில் இவர் பாக்கித்தான் ஊதியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1949 ஆம் ஆண்டில் லாகூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.[2]

தலைமை நீதிபதி[தொகு]

1954 ஆம் ஆண்டில் முனீர் மத்திய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பாக்கித்தானின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.[3] பிரதம நீதியரசர் தவிர, இவர் சூன் 1956 முதல் சூலை 1958 வரை எல்லை நிர்ணய ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். 1960 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.[1]

பாக்கித்தானின் முதல் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதை உறுதிப்படுத்தி, அவசியத்தின் கோட்பாட்டை முனீர் முன்மொழிந்தர். அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான கவர்னர் ஜெனரல் குலாம் முகம்மது அவர்களால் 24 அக்டோபர் 1954 அன்று சட்டசபை கலைக்கப்பட்டது. சில பாக்கித்தான் அரசியல்வாதிகள் கலைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், முனீர் கலைப்பைச் சரிபார்த்ததற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டார்.[4]

எழுத்துகள்[தொகு]

ஜின்னாவிலிருந்து ஜியா வரை என்ற புத்தகத்தையும் முகம்மது முனீர் எழுதினார். [5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chief Justice Muhammad Munir: his life, writings, and judgements. Research Society of Pakistan. 1973. https://books.google.com/books?id=bCpYAAAAMAAJ. பார்த்த நாள்: 16 May 2013. 
  2. Chief Justice Muhammad Munir: His Life, Writings and Judgments. Research Society of Pakistan. 1973. https://books.google.com/books?id=m4OcPgAACAAJ. பார்த்த நாள்: 16 May 2013. 
  3. Paula R. Newberg (16 May 2002). Judging the State: Courts and Constitutional Politics in Pakistan. Cambridge University Press. பக். 25–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-89440-1. https://books.google.com/books?id=PbSeGQO3xdsC&pg=PA25. பார்த்த நாள்: 16 May 2013. 
  4. Imtiaz Omar (2002). Emergency powers and the courts in India and Pakistan. Martinus Nijhoff Publishers. பக். 55–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-411-1775-5. https://books.google.com/books?id=o6-wZP7Tz8YC&pg=PA55. பார்த்த நாள்: 16 May 2013. 
  5. Muhammad Munir (1980). From Jinnah to Zia. Vanguard Books. https://books.google.com/books?id=eRgvAAAAYAAJ. பார்த்த நாள்: 16 May 2013. 
  6. Muhammad Munir. Goodreads Mobile | see what your friends are reading. Goodreads.com. http://www.goodreads.com/book/show/14759046-from-jinnah-to-zia-by-muhammad-munir. பார்த்த நாள்: 2013-05-16. 
  7. Hafiz Sher Muhammad. The Ahmadiyya Case. www.aaiil.org. பக். 316–. GGKEY:19TKD2GN31G. https://books.google.com/books?id=uxnRQfRqIdwC&pg=PA316. பார்த்த நாள்: 16 May 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_முனீர்&oldid=3754343" இலிருந்து மீள்விக்கப்பட்டது