முகமது சாவத் பிர்சாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகமது சாவேது பிர்சாதா (Mohammed Javed Pirzada) இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய நாட்டின் அரசியல்வாதி ஆவார். 2007 ஆம் ஆண்டு, 2012 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற இவர், குசராத்து மாநிலத்தில் உள்ள வாங்கனேர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியலில் சேருவதற்கு முன்பு, பிர்சாதா பள்ளியின் முதல்வராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் இளங்கலை மற்றும் இளங் கல்வியியல் பட்டங்களை சௌராசுடிரா பல்கலைக்கழகத்தில் பெற்றார். [1] [2] [3] 2018 ஆம் ஆண்டில், குசராத் மாநில வக்ப் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவ்வாரியம் முசுலீம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்களுக்கு பொறுப்பான அமைப்பாகும். [4]

பிர்சாடா ஒரு முக்கிய உள்ளூர் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவரது தந்தை அப்துல் பிர்சாதா மற்றும் இரண்டு சகோதரர்கள் மன்சூர் பிர்சாதா மற்றும் குர்சித் பிர்சாதா ஆகியோரும் குசராத்து மாநில பாராளுமன்ற தொகுதி வான்கனேரில் இருந்து பிரதிநிதிகளாக பணியாற்றியுள்ளனர். [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சாவத்_பிர்சாடா&oldid=3846787" இலிருந்து மீள்விக்கப்பட்டது