முகமது அப்துல் கரீம் (முன்ஷி)
முன்ஷி ஹபீஸ் முகமது அப்துல் கரீம் | |
|---|---|
Portrait by Rudolf Swoboda, 1888 | |
| விக்டோரியாவின் இந்திய உதவியாளர் | |
| பதவியில் 1892–1901 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1863 லலித்பூர், இந்தியா |
| இறப்பு | 20 ஏப்ரல 1909 (அகவை 46) [1] ஆக்ரா, இந்தியா |
| தேசியம் | பிரித்தானிய இந்தியா |
| துணைவர் | ராசிதான் கரீம் |
| சமயம் | இஸ்லாம் |
முகமது அப்துல் கரீம் (1863 – 20 ஏப்ரல் 1909), என்பவர் அரசி விக்டோரியாவின் இந்திய உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். விக்டோரியாவின் ஆட்சியின் கடைசி 14 ஆண்டுகளில் அவர் அவருக்கு சேவை செய்தார். அந்தக் காலத்தில் அவரது மதிப்பையும் பாசத்தைப் பெற்றார்.
பிரிட்டிஷ் இந்தியாவின் ஜான்சிக்கு அருகிலுள்ள லலித்பூரில் ஒரு மருத்துவமனை உதவியாளரின் மகனாக கரீம் பிறந்தார். விக்டோரியாவின் பொன்விழாவின் ஆண்டில் (1887), ராணியின் ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்தியர்களில் கரீமும் ஒருவர். விக்டோரியா அவரை மிகவும் விரும்பி அவருக்கு "முன்ஷி" ("எழுத்தர்" அல்லது "ஆசிரியர்") என்ற பட்டத்தை வழங்கினார். விக்டோரியா அவரை தனது இந்திய செயலாளராக நியமித்தார், மேலும் இந்தியாவில் அவருக்காக ஒரு நில மானியத்தையும் அளித்தார்.
கரீமுக்கும் அரசிக்கும் இடையிலான உறவு, அரச ஊழியர்களுக்குள் முனுமுனுப்பை ஏற்படுத்தியது.[2][3] ராணி தனது பயணங்களில் கரீமை தன்னுடன் அழைத்துச் செல்ல வலியுறுத்தினார், இது அவருக்கும் அவரது மற்ற உதவியாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்களை ஏற்படுத்தியது. 1901 இல் விக்டோரியாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது அடுத்து அரியனை ஏறிய ஏழாம் எட்வர்டு, கரீமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினார். விக்டோரியாவுடனான கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அழிக்க உத்தரவிட்டார். கரீம் ஆக்ரா அருகே விக்டோரியா தனக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்தில் தனது இறப்புவரை வசித்து வந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Qureshi, Siraj (20 April 2016). "Death anniversary of Queen Victoria's personal secretary Munshi Abdul Kareem observed". India Today (in Indian English). Archived from the original on 24 May 2021. Retrieved 2021-05-24.
- ↑ Miller, Julie (22 September 2017). "Victoria and Abdul: The Truth About the Queen's Controversial Relationship". Vanity Fair. Retrieved 27 November 2018.
- ↑ Mack, Tom (11 September 2017). "Queen Victoria confidante Abdul Karim's descendant 'honoured' by royal connection". Leicester Mercury. https://www.leicestermercury.co.uk/news/local-news/queen-victoria-confidante-abdul-karims-458066.