முகட்டலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"11" முகட்டலகு
பாம்பின் தலையில் செதில்கள்

முகட்டலகு (lore) என்பது பறவைகள், ஊர்வன மற்றும் நீர் நில வாழ்வனவற்றின் கண்கள் மற்றும் நாசிகளுக்கு இடையே உள்ள பகுதி.

பறவைகள்[தொகு]

பறவைகளில் முகட்டலகு என்பது ஒரு பறவையின் தலையின் பக்கத்திலுள்ள கண்ணுக்கும் அலகுக்கும் இடையில் உள்ள பகுதியாகும்.[1] இந்த பகுதி சில சமயங்களில் இறகுகள் இல்லாமல் இருக்கும். மேலும் பல வகையான நீர்க்காக குடும்பங்களில் உள்ளதைப் போல தோல் நிறத்துடன் காணப்படும்.[2] கண்ணுக்கு நேர் எதிரே இருக்கும் இந்தப் பகுதி, சிவப்பு தலை உப்புக்கொத்தி உட்பட பல பறவை சிற்றினங்களில் "முகட்டுப் பட்டையுடன்" காணப்படும்.

நீர்நில வாழ்வன, ஊர்வன[தொகு]

நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வனவற்றில், முகட்டலகு என்பது கண்களுக்கு இடையே அல்லது கண்கள் மற்றும் நாசிக்கு இடையில் உள்ள பகுதிகளை குறிக்கும். இவை கண்ணுக்கும் அலகுக்கும் இடைப்பட்ட பறவைகளின் பகுதிக்கு ஒப்பானவை.

பாம்பு மற்றும் ஊர்வனவற்றில் லோரியல் செதில்கள் என்பது கண்களுக்கும் நாசிக்கும் இடைப்பட்ட செதில்களைக் குறிக்கும்.[3] குழிவிரியன்களில் லோரியல் குழி தலையின் இருபக்கங்களிலும் காணப்படும்.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Project Green Shores: Green Heron" (PDF). பார்க்கப்பட்ட நாள் June 18, 2011.
  2. Margaret A. Wissman. "Avian Anatomy". பார்க்கப்பட்ட நாள் June 18, 2011.
  3. Phil Bowles. "Glossary". The Online Field Guide. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.
  4. Campbell JA, Lamar WW. 2004. The Venomous Reptiles of the Western Hemisphere. 2 volumes. Comstock Publishing Associates, Ithaca and London. 870 pp. 1500 plates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-4141-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகட்டலகு&oldid=3755229" இலிருந்து மீள்விக்கப்பட்டது