உள்ளடக்கத்துக்குச் செல்

முகசெயலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகசெயலி
உருவாக்குனர்வயர்லஸ் லேப்
தொடக்க வெளியீடுசனவரி 2017; 7 ஆண்டுகளுக்கு முன்னர் (2017-01)
இயக்கு முறைமைஐஓஎஸ், ஆண்ட்ராய்டு
மென்பொருள் வகைமைபுகைப்படங்களை திருத்தம்செய்தல்
இணையத்தளம்faceapp.com

முகசெயலி (FaceApp )என்பது திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் இந்தச் செயலி வயர்லஸ் லேப் எனும் உருசிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. செயற்கை அறிவுத்திறன் மூலமாக புகைப்படங்களை சிரிப்பது போலவும், இளமையாக அல்லது முதுமையாகவோ மற்றும் பாலினங்களை மாற்றம் செய்யவும் இயலும்.[1][2]

வசதிகள்

[தொகு]

முகசெயலி செயலியானது சனவரி 2017 இல் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் பெப்ரவரி 2017 இல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்பாட்டிற்கு வந்தது.[3][4] இதில் உள்ள பல இடப்புகளின் மூலமாக புகைப்படங்களில் சிரிப்பு, முடியின் வண்ணத்தினை மாற்றுதல், சிகை அலங்காரம், கண்ணாடி அணிவது, மீசை, தாடி மற்றும் வயதினைக் குறைப்பது அல்லது கூட்டுவது போன்ற பல மாற்றங்களைச் செய்ய இயலும். பச்சை குத்துதல், நிறச்சரிவு, மங்கலாக்குதல் போன்ற வடிகட்டுகளையும் செய்ய இயலும்.[5]

சான்றுகள்

[தொகு]
  1. Vincent, James (27 January 2017). "This app uses neural networks to put a smile on anybody's face". The Verge. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  2. Stark, Harold (25 April 2017). "Introducing FaceApp: The Year Of The Weird Selfies". Forbes. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  3. Vincent, James (15 February 2017). "Android users can now harness the power of neural networks to alter faces". The Verge. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  4. Tan, Yvette (15 February 2017). "Viral selfie-morphing FaceApp launches on Android after huge iOS success". Mashable. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  5. Karner, Jen (2019-07-18). "Try out all of the different filters on FaceApp". Android Central (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

இவற்றையும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகசெயலி&oldid=3727658" இலிருந்து மீள்விக்கப்பட்டது