மீரா (கவிஞர்)
மீரா (Meera (poet)) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். மீராவின் இயற்பெயர் மீ. இராசேந்திரன் என்பதாகும். 1938 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று மீனாட்சிசுந்தரம் - இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாக இவர் பிறந்தார்.[1] சிவகங்கையில் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை படித்து முடித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் படித்தார். தான் படித்த கல்லூரியான மன்னர்துரைசிங்கம் கல்லூரியிலேயே தமிழ்பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். மகாகவி பாரதியாருக்கு நூற்றாண்டு விழா சிவகங்கையில் பத்துநாள்கள் கொண்டாடினார். தமிழ்ப் புதுக்கவிஞரான இவர் அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்தினார்.[2] ஒரு பதிப்பாளராகவும், இலக்கிய இயக்கமாக தன் பதிப்பகத்தை நடத்தியவர் என்பதற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.
மீராவின் நூல்கள் 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
குடும்ப வாழ்க்கை
[தொகு]இரா. சுசீலா என்ற பெண்ணை செப்டெம்பர் 10, 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று திருமனம் செய்து கொண்டார். தம்பதியருக்கு கண்மணி செல்மா, சுடர், கதிர் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
பொது வாழ்க்கை
[தொகு]மீரா கல்லூரிப் படிப்பின்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தார். திராவிட இயக்க இதழ்களில் கவிதைகள் எழுதினார். பின்னர் வானம்பாடி இயக்கம் வழியாக இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டார். இடதுசாரி தொழிற்சங்கமான மூட்டாவில் தீவிரமாகப் பணியாற்றினார். இறுதிவரை மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.
பதிப்பக வாழ்க்கை
[தொகு]மீரா அன்னம் பதிப்பகத்தை 1974 ஆம் ஆண்டில் தொடங்கினார். அபி எழுதிய மௌனத்தின் நாவுகள் என்னும் கவிதைநூலை முதல்நூலாக வெளியிட்டார். பின்னர் இணை பதிப்பகமாக அகரம் பதிப்பகத்தை தொடங்கினார். கி. ராஜநாராயணன், வண்ணதாசன், அப்துல் ரகுமான் போன்றவர்கள் படைப்புகளை வெளியிட்டார். இளம்படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தார். கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிட்டார். சுப்ரபாரதி மணியன், ஜெயமோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், சோ. தர்மன் போன்ற எழுத்தாளர்கள் இவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மறைவு
[தொகு]மீரா செப்டெம்பர் 1, 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று மீ. இராசேந்திரன் என்கின்ற மீரா காலமானார்.
- தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
- பாவேந்தர் விருது
- சிற்பி இலக்கிய விருது
- தமிழ்ச் சான்றோர் பேரவை விருது
படைப்புகள்
[தொகு]திறனாய்வு
[தொகு]- மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு[4]
கவிதை
[தொகு]- மீ.இராசேந்திரன் கவிதைகள்
- மூன்றும் ஆறும்
- மன்னர் நினைவில்
- கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்[5]
- ஊசிகள்
- கோடையும் வசந்தமும்
- குக்கூ
கட்டுரைகள்
[தொகு]- வா இந்தப் பக்கம்
- எதிர்காலத் தமிழ்க்கவிதை
- மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
[தொகு]- முகவரிகள்
கலந்துரையாடல்
[தொகு]- கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்[6]
தொகுத்தவை
[தொகு]- தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
- பாரதியம் (கவிதைகள்)
- பாரதியம் (கட்டுரைகள்)
- சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)
நடத்திய இதழ்கள்
[தொகு]- அன்னம் விடு தூது
- கவி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "‛கவிஞர் மீராவுக்கு மணிமண்டபம்!’ சிவகங்கை மக்கள் கோரிக்கை". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/101070-tamil-poetry-meera-special-article. பார்த்த நாள்: 19 April 2024.
- ↑ "மன்னர் துரைசிங்கம் கல்லூரிக்கு கவிஞர் மீரா பெயர் சூட்டவேண்டும்' - தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/135687-to-honor-poet-meera-tamil-activists-request. பார்த்த நாள்: 19 April 2024.
- ↑ "மீரா (கவிஞர்) குறிப்பு". எழுத்து.காம். https://eluthu.com/poetprofile/Meera-%28poet%29. பார்த்த நாள்: 19 April 2024.
- ↑ "Welcome To TamilAuthors.com", www.tamilauthors.com, retrieved 2024-04-19
- ↑ "கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்=மீரா". நியூசு ஜெ. https://newsj.tv/tamil-poetry-meera-memorial-day-45248/. பார்த்த நாள்: 19 April 2024.
- ↑ "மீ.ராஜேந்திரன் (மீரா) (1938 - 2002)". அண்ணா நூற்றாண்டு நூலகம். https://www.annacentenarylibrary.org/pages/view/157-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE---1938. பார்த்த நாள்: 19 April 2024.