மீனா தண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர். மீனா தண்டா ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு இந்திய தத்துவவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் கலாச்சார அரசியல் பேராசிரியராக உள்ளார். மேலும் புலம்பெயர்ந்த தலித் ஆய்வுகளின் வளர்ச்சியில் முன்னணி கல்வியாளராக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவராவார். [1] அவர் ஒரு நடைமுறை நோக்கத்துடன் தத்துவத்தை நடத்துகிறார். [2] அவரது பணி பிரிட்டனில் சமத்துவச் சட்டம் 2010 ன் கீழுள்ள பகுதிகளில் சாதிப் பாகுபாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, சாதி அடிப்படையிலான இப்பாகுபாடுகளுக்கெதிராக சட்டப் பாதுகாப்பிற்கான அழுத்தத்தையும் தந்தது. [3]

சுயசரிதை[தொகு]

மீனா தண்டா 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாபிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று காமன்வெல்த் புலமைப்பரிசில் விருதுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1992 இல் வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முழுநேர விரிவுரையாளர் பதவியைப் பெறுவதற்கு முன்பு, ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் ஹில்டா கல்லூரியில் ரோட்ஸ் ஜூனியர் ஆய்வாளராக இருந்தார். [4] அவர் செப்டம்பர் 17, 2018 அன்று பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

தண்டா, தத்துவத் துறையிலுள்ள இனவெறியின் பிரச்சனைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அந்தத் துறையில் மேலதிகப் பன்முகத்தன்மைக்கு அழைப்பு விடுத்தார். [5] மேலும் தனது "சமூக ஈடுபாடு கொண்ட தத்துவத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார். [6]


அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகபெண்களுக்கான சமூகத்தின் தத்துவத்தின் ஐக்கிய இராஜியத்தின் கிளையில் செயல் உறுப்பினராக உள்ளார்.2017 ஆம் வரை, சமூகத்தின் நிதிக் குழுவில் அமர்ந்துள்ளார். [7]

முக்கிய படைப்புகள்[தொகு]

செப்டம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை யுகே சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திற்காக (EHRC) 'பிரிட்டனில் ஜாதி' என்ற திட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதன் மூலம் அவர் இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தார். இவர், "பிரிட்டனில் ஜாதி: சமூக-சட்ட ஆய்வு", [8] மற்றும் "பிரிட்டனில் ஜாதி: நிபுணர்களின் கருத்தரங்கு மற்றும் பங்குதாரர்களின் பட்டறை" ஆகியனவாகும். [9]

'பஞ்சாபி தலித் இளைஞர்கள்: அடையாள மாற்றங்களின் சமூக இயக்கவியல்', (தற்கால தெற்காசியா, 2009) உட்பட, சாதி மற்றும் இனம் ஆகிய தலைப்புகளில் ஏராளமான இடைநிலைக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். 'ஓடிப்போன திருமணங்கள்: ஒரு மௌனப் புரட்சியா?' , (பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ், 2012), 'சில விசுவாசங்கள், நிச்சயமற்ற அடையாளங்கள்: பிரிட்டனில் தலித்துகளின் நிரம்பிய போராட்டங்கள்' (ட்ரேசிங் தி நியூ இந்தியன் டயாஸ்போரா, 2014),தெற்காசியர்கள் மட்டும்தான் கௌரவத்தை மீட்டெடுக்கிறார்களா? ('கௌரவம்' மற்றும் பெண்ணுரிமைகள், 2014), 'சாதி எதிர்ப்பு மற்றும் தவறான நேட்டிவிசம்' (தீவிர தத்துவம், 2015) ஆகிய தலைப்புகளிலும் கட்டுரைகள வழங்கியுள்ளார். [10]

அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவை,

  • எ மோனோகிராஃப்,
  • தி நெகோஷியேஷன் ஆஃப் பெர்சனல் ஐடென்டிட்டி [11] (Saarbrüken: VDM Verlag, 2008) மற்றும்
  • ரிசர்வேஷன் ஃபார் வுமன்[12] (புது டெல்லி: வுமென் அன்லிமிட்டட், 2008)

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

2012 ல்[13] முடிவடைந்த 'சாதி ஒதுக்கம்: பஞ்சாபிய தலித் அடையாளம் மற்றும் அனுபவம்' என்ற முதன்மை ஆராய்ச்சி திட்டத்திற்காக அவருக்கு லெவர்ஹுல்ம் ஆராய்ச்சி ஆய்வுத்தொகை வழங்கப்பட்டது.

நூல் பட்டியல்[தொகு]

பத்திரிகை கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள்[தொகு]

  • தண்டா, எம். (2009) ' பஞ்சாபி தலித் இளைஞர்கள்: அடையாளத்தின் மாற்றங்களின் சமூக இயக்கவியல் ', தற்கால தெற்காசியா, 17, 1: 47-64.
  • தண்டா, எம். (2013) ' சாதி மற்றும் சர்வதேச இடம்பெயர்வு, இந்தியா இங்கிலாந்துக்கு ', ஐ. நெஸ் (பதிப்பு. ), உலகளாவிய மனித இடம்பெயர்வுக் கலைக்களஞ்சியம் . விலே பிளாக்வெல்.
  • தண்டா, எம். (2013) 'சில பற்றுறுதிகள், நிச்சயமற்ற அடையாளங்கள்: பிரிட்டனில் தலித்துகளின் போராட்டங்கள்', ஓ.பி. த்விவேதி (பதிப்பு. ), தி நியூ இந்தியன் டயஸ்போரா. நியூயார்க்: பதிப்புகள் ரோடோபி, 99-119.
  • தண்டா, எம். (2015) 'சாதி எதிர்ப்பு மற்றும் தவறான அகவியல்: இனத்தின் அம்சமாக சாதியைக் காணுதல்' தீவிர தத்துவம், 192, ஜூலை-ஆகஸ்ட், பக். 33-43.
  • தண்டா. எம்., மோசே .டி., வாஹ்ரே.எ., கியானே.டி., கிரீன். ர்., இஃப்ராட்டி. எஸ். மற்றும் முண்டி. ஜே.கே., (2014) பிரிட்டனில் சாதி: நிபுணர்கள் கருத்தரங்கு மற்றும் பங்குதாரர்களின் பட்டறை . சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வு அறிக்கை எண். 92. மான்செஸ்டர்: சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம்.
  • தண்டா. எம்., மோசே .டி., வாஹ்ரே.எ., கியானே.டி., கிரீன். ர். மற்றும் விட்டிட் . எஸ்.(2014) பிரிட்டனில் சாதி: சமூக-சட்ட ஆய்வு . சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வு அறிக்கை எண். 91. மான்செஸ்டர்: சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம்.
  • தண்டா, எம். (2020) சாதிய எதிர்ப்புக்கான தத்துவம் சார் அடிப்படைகள். [1] . அரிஸ்டாட்டிலிய சமூகத்தின் நடவடிக்கைகள், 120, 1: 71–96.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Meena Dhanda - University of Wolverhampton". www.wlv.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  2. "Dr Meena Dhanda - University of Wolverhampton". www.wlv.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  3. "Enacting legal protection against Caste-discrimination: Why the delay?". philevents.org. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  4. "Dr Meena Dhanda - University of Wolverhampton". www.wlv.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  5. Ratcliffe, Rebecca; Shaw, Claire (2015-01-05). "Philosophy is for posh, white boys with trust funds' – why are there so few women?" (in en-GB). The Guardian. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/higher-education-network/2015/jan/05/philosophy-is-for-posh-white-boys-with-trust-funds-why-are-there-so-few-women. 
  6. "Featured Philosopher: Meena Dhanda" (in en-US). Philosopher. 2017-02-17. https://politicalphilosopher.net/2017/02/17/featured-philosopher-meena-dhanda/. 
  7. "SWIP UK: Executive Committee". www.swipuk.org (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  8. "Research report 91: Caste in Britain: Socio-legal Review | Equality and Human Rights Commission". www.equalityhumanrights.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  9. "Research report 92 : Caste in Britain - Experts' Seminar and Stakeholders' Workshop | Equality and Human Rights Commission". www.equalityhumanrights.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
  10. "Featured Philosopher: Meena Dhanda" (in en-US). https://politicalphilosopher.net/2017/02/17/featured-philosopher-meena-dhanda/. 
  11. Dhanda, Meena (2008). The negotiation of personal identity. Saarbrücken: VDM Verlag Dr. Müller. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3639029314. http://catalog.hathitrust.org/Record/011803432. 
  12. Dhanda, Meena (2008). Reservations for Women. Women Unlimited, Kali for Women. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788188965410. https://books.google.com/books?id=hEvaAAAAMAAJ. 
  13. "December 2010 - Prestigious fellowship awarded to University philosopher - University of Wolverhampton". www.wlv.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_தண்டா&oldid=3680700" இலிருந்து மீள்விக்கப்பட்டது