மின்காப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலியெத்திலினால் மேல் தோல்கள் கொண்ட செம்பு மின்கடத்தி

மின்காப்பான் (Insulator, Non-conductor ) என்பது மின்சாரம் தன் மீது பாய்வதை எதிர்க்கும் பொருள் ஆகும் . மின்கடத்தாப் பொருள் தன் அணுக்களில் உள்ள இணைதிறன் எதிர்மின்னிகள் (valence electrons) ஒன்றுக்கொன்று இருக்கமாக பிணைந்து இருக்கும். அந்த இணைதிறன் எதிர்மின்னிகள் இருக்கமாக பிண்ணி பிணைந்து இருப்பதால் இவ்வகை பொருட்களில் மின்சாரத்தை கடத்தாமல் எதிர்க்கிறது . இவையே மின்கடத்திகளின் மீது மின்காப்பானாக பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக மின்சாரத்தை பாய்ச்சாத எல்லா பொருட்களும் மின்காப்பான் எனப்படும். மின்னியல் துறையில் சில நெகிழிகள் கொண்டு மின்கடத்தானை தயாரிக்கிறார்கள். மேலும் மின்சார இயக்கிகளில் மின்காப்பானாக மூங்கில் பயன்படுகிறது. மின்காப்பான்கள் மின்கடத்திகளின் மேல் தோல்களாக அமைக்கப் பயன்படுத்துகின்றனர். இதனால் மின்கடத்திகள் மனித அல்லது விலங்குகளில் உடலில் தொடும் போது மின்சாரம் பாயாமல் இருக்கும். இது பாதுகாப்பிற்காகவும் விபத்தைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காப்பான்&oldid=1864565" இருந்து மீள்விக்கப்பட்டது