இணைதிறன் எதிர்மின்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்களின் வெளிப்புற வலயத்தில் (விட்டத்தில்) சுற்றும் எதிர்மின்னிகளுக்கு இணைதிறன் எதிர்மின்னி அல்லது வலுவளவு எதிர்மின்னி (valence electron) என்று பெயர் . ஓர் அணு மற்றொரு அணுவுடன் இணைந்து சேர்மமாகும் (மூலக்கூறு ஆகும்) பொழுதோ பிறவாறு வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும்பொழுதோ இந்த புற வலய எதிர்மின்னிகள் பங்கு கொள்வதால் இவற்றை இணைதிறன் எதிர்மின்னிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை இயை எதிர்மின்னிகள் என்றும், இவ் எதிர்மின்னிகள் உள்ள புற வலயத்தை இயைனி வலயம் என்றும் அழைக்கப்படும். அணுவின் வெளிப்புற வலயத்தில் நிரம்பி இருக்ககூடிய எல்லா இணைதிறன் எதிர்மின்னிகளும் ஓரணுவில் இருந்துவிட்டால், அவ்வணு தன் இணைதிறன் எதிர்மின்னிகளை மற்ற அணுக்களோடு வினை புரிவதற்கு தராது. இயைனி வலையத்தில் அது கொள்ளக்கூடிய எதிர்மின்னி எண்ணிக்கையினும் குறைவாக எதிர்மின்னிகள் இருந்தால் மட்டுமே எதிர்மின்னிகளை ஏற்றோ, இழந்தோ வேதிப் பிணைப்புகள் ஏற்படுகின்றன. புற வலயத்தில் அதிக அளவாகக் கொள்ளக்கூடிய எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுக்களின் வகைகளைப் பொருத்தது.

இணைதிறன் எதிர்மின்னிகள்[தொகு]

ஈலியம் அணு (ஒப்பளவு இல்லாத படம்))ஈலியம் அணுவின் ஒப்புரு
இந்த ஈலியம் அணுவில் இரண்டு எதிர்மின்னிகள் புற வலயத்தில் காட்டப்பட்டுள்ளன. இவ்வணுவின் கருவின் இரண்டு நேர்மின்னிகளும், இரண்டுநொதுமி (நியூட்ரான்)களும் உள்ளன. இருக்கும் இரண்டு எதிர்மின்னிகளும் புற வலயத்தில் உள்ளன. இந்த முதல் புறவலயம் இரண்டே இரண்டு ஏதிர்மின்னிகளைத்தான் கொள்ளவல்லன. ஆகவே இப் புற வலயம் நிரம்பி உள்ளது.

எவ்வளவு இயைனி எதிர்மின்னிகள் அல்லது இணைதிறன் எதிர்மின்னிகள் அதிக அளவாக புற வலயத்தில் இருக்க முடியும் என்பது அது தனிம அட்டவணையில் எந்த நெடுங்குழுவில் உள்ளது என்பதைப் பொருத்தது. பிறழ்வரிசை மாழை அணுக்களைத்தவிர மற்ற அணுக்கள் அவை இருக்கும் இருக்கும் நெடுங்குழுவைக்கொண்டு முடிவு செய்யலாம்.

தனிம அட்டவணை நெடுங்குழு இணைதிறன் எதிர்மின்னிகள்
நெடுங்குழு 1 (I) (கார மாழைகள்) 1
நெடுங்குழு 2 (II) (காரக்கனிம மாழைகள்) 2
நெடுங்குழுக்கள் 3-12 (பிறழ்வரிசை மாழைகள்) #*
நெடுங்குழு 13 (III) (போரான் குழு) 3
நெடுங்குழு 14 (IV) (கரிமக் குழு) 4
நெடுங்குழு 15 (V) (நைதரசக் குழு) 5
நெடுங்குழு (VI) (சால்க்கோச்சென்கள்) 6
Group 17 (VII) (ஆலசன்கள்) 7
Group 18 (VIII or 0) (நிறைம வளிகள்) 8**

* பிறழ்வரிசை மாழைகளில் உள்ள இயைனி எதிர்மின்னிகளை கணக்கிட பொதுவான முறை பயன்படாது. இதற்கு மாறாக டி-வலைய எதிர்மின்னி எண்ணிக்கையைக் (d electron count) கொண்டு அளவிடுகிறார்கள்

** ஈலியத்தைத் தவிர - இதில் இரண்டே இரண்டு இணைதிறன் எதிர்மின்னிகள்தாம் உள்ளன.