பேச்சு:மின்காப்பான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்கடத்தி, வன்கடத்தி, குறைக்கடத்தி மற்றும் மீகடத்தி முறையே conductor, insulator, semiconductor, superconductor. கடத்தாப்பொருள்,மின்கடத்தான் என்பதை விட வன்கடத்தி என்பது சரியான சொல்லாக இருக்கும். இவற்ரின் கடத்துமை மிகக்குறைவு ஆனால் மின்கடத்தாப்பொருள் அல்ல.நன்கடத்தி என்பதை வெறும் கடத்தி என்றாலே போதும். எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். பின்காப்பான் என்பது electrical portector என்பது போல பொருள் தருகின்றது. Insulated copper என்னும் சொல்லை நெடுங்காலமாக காப்பிடப்பட்ட செப்புக் கம்பிகள் என்றுதான் வழங்கி வந்திருக்கின்றோம் (1960களில் இருந்து). ஆகவே insulated என்பதற்கு காப்பிடப்பட்ட என்பது சரியான சொல். மின்காப்பி என்று insulation material ஐக் குறிக்கலாம். electrical coffee அல்ல :) ஆனால் வன்கடத்தி சரியான சொல்லாக இருக்கும். ஒரே சீராகவும் இருக்கும் (நன்கடத்தி, வன்கடத்தி, குறைக்கடத்தி, மீகடத்தி).--செல்வா 15:19, 16 ஆகஸ்ட் 2009 (UTC)

மின்காப்பான் என்ற சொல்லை நான் பள்ளி ஏடுகளில் இருந்து எடுத்தேன் . நமது பள்ளி குழந்தைகளுக்கு இப்படி தான் அவர்கள் கற்று தருகிறார்கள் .இன்னும் கற்று தந்து கொண்டு இருக்கிறார்கள் . அவர்கள் ஒரு மாதிரி கற்றுத்தந்து நாம் வேறாக இங்கு பதிவிட்டு , கடைசியில் விளங்காமல் குழப்பம் தந்து விடுமோ என்று ஐயம் ஏற்ப்படுகிறது . எனினும் நன்கு ஆழ்ந்து சிந்தித்து பொருத்தமான சொல்லை தக்க விளக்கங்களோடு நாம் இக்கட்டுரையை தொகுத்தால் அவர்கள் நம்மை பார்த்து அவ்வேடுகளில் திருத்தம் செய்வார்கள் . நாம் தேர்ந்து எடுக்கும் சொல் மின்காப்பான் என்ற சொல்லை விட ஏன் நன்கு பொருத்தமானது என்பதையும் இங்கு நாம் சொல்ல கடமை பட்டிருக்கிறோம் . நீங்கள் கூறிய பரிந்துரைகளை நான் சிந்தித்துப் பார்க்கிறேன் . --இராஜ்குமார் .
மற்றும் ஒரு கருத்து . மின்மம் என்ற கட்டுரையை பார்த்தேன் . பள்ளி ஏடுகளில் அதனை மின்னூட்டம் ( electric charge ) என்று பதிப்பித்துள்ளது . இதை பற்றியும் தங்கள் கருத்துக்களை கூறவும் . --இராஜ்குமார் .


மின்னூட்டு ( மின்னூட்டம்) என்றும் மின்மம் என்றும் இரண்டு கட்டுரை இருக்கிறதே !!! அவ்விரண்டுமே electric charge என்ற ஆங்கில கட்டுரையோடு இணைக்கப்பட்டுள்ளது . எதற்கு இந்த குழப்பம் . --இராஜ்குமார் .
dieletrics - மின்காப்புகள் , insulator மின்காப்பான் . என்று அவர்கள் வரையறை செய்துள்ளார்கள் . இதை பற்றிய உங்கள் கருத்து என்ன ? --இராஜ்குமார் .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்காப்பான்&oldid=417353" இலிருந்து மீள்விக்கப்பட்டது