மித்ரி, சிர்சா
மித்ரி Mithri, | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | சிர்சா |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-எச்.ஆர் |
வாகனப் பதிவு | எச்.ஆர்-24 |
இணையதளம் | haryana |
மித்ரி (Mithri) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1] இது சிர்சாவிலிருந்து 43.2 கிமீ தொலைவிலும், தப்வாலியிலிருந்து 14.5 கிமீ தொலைவிலுஂம் உள்ளது. இப்பகுதியின் பரப்பளவு சுமார் 19.93 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். கிராமத்திலுள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 424 ஆகும்.[2]
மக்கள்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மித்ரியின் மக்கள் தொகை 2313 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் (1208) 52.22% ஆகவும், பெண்கள் (1105) 47.77% ஆகவும் இருந்தது. மித்ரி கிராமத்தில், 0 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 256 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.07% ஆகும். மித்ரி கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் என்ற் அளவில் இருந்தது. இது அரியானா மாநில சராசரியான 879 என்பதை விட அதிகமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மித்ரியின் குழந்தை பாலின விகிதம் 1000 ஆகும். இது அரியானா மாநில சராசரியான 834 என்பதை விடவும் அதிகமாகும்.[3]
எழுத்தறிவு
[தொகு]அரியானாவுடன் ஒப்பிடும்போது இங்கு கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 60.14% ஆக இருந்தது, இது அரியானாவில் 75.55% என்பதோடு ஒப்பிடுகையில் குறைவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mithri · Haryana 125104". Mithri · Haryana 125104 (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-04-10.
- ↑ "Indian Government Census Report Sirsa" (PDF).
- ↑ "Mithri, Sirsa".