உள்ளடக்கத்துக்குச் செல்

மித்ரா பிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா மாநில அருங்காட்சியகத்தில் காணப்பட்ட மித்ரா பிரின் உருவப்படம்

மித்ரா பிர், கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரரும்,பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் அம்மாநிலம் முழுவதும் பரப்பியவருமானவர். கோவா,போர்த்துகீசிய காலனியாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் மற்ற பெண் வீரர்களுடன் கலந்து கொண்டதால், அவரது ​​இருபத்தி இரண்டு வயதிலேயே, பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். [1] சிறையிலிருந்து வெளியே வந்ததும் காந்தியவாதியும் முன்னாள் கோவா சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மாதவ் ஆர்.பிரை திருமணம் செய்து அரசியலிலும், பெண்கல்வியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

கோவா மாநில பெண்களின் கல்வியை முன்னேற்ற, வெலிம், மார்கோவ், ககோரா போன்ற கோவாவின் முக்கியமான நகரங்களில் பெண்களுக்கான பள்ளிகளையும், பெண்களுக்கான வயது வந்தோர் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வந்தார்.


இவ்வாறு விடுதலை போராட்டங்களிலும், பெண் கல்விக்காகவும் பாடுப்பட்ட இவர் 1978 ம் ஆண்டு  இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்ரா_பிர்&oldid=3777748" இலிருந்து மீள்விக்கப்பட்டது