உள்ளடக்கத்துக்குச் செல்

மித்ரா தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மித்ரா தத்தா (Mitra Dutta) ஓர் இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் மின்னணுவியல் பொறியியலாளர் ஆவார். 1953 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[1]:{{{3}}} ஒளிமின்னணுவியல் துறையில் நிபுணத்துவம் காரணமாக இவர் நன்கு அறியப்படுகிறார். சிகாகோவில் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். முன்னதாக ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தராகவும் இருந்தார்.[2]:{{{3}}}

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தலைநகரமான கவுகாத்தியில் அமைந்திருக்கும் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் மித்ரா இளநிலை பட்டம் பெற்றார். புதுதில்லியில் அமைந்துள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் ஓகையோ மாநிலத்தில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]:{{{3}}}

பர்தியூ பல்கலைக்கழகத்துடன் இணைந்த நியூயார்க் நகரக் கல்லூரியில் முனைவர் பட்டமேற்படிப்பை முடித்த இவர் புரூக்காவன் தேசிய ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். இறுதியில் அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி ஆய்வகத்தில் இயற்பியல் பிரிவின் இயக்குநராகவும் குழு தலைவராகவும் இருந்தார். 1996 ஆம் ஆண்டு இராணுவ ஆய்வு அலுவலகத்திற்கு மாறினார். அங்கு மின்னணுவியல் பிரிவின் தலைவராகவும், பின்னர் ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைப்பு இயக்குநராகவும், பொறுப்பு வகித்தார்.[4]:{{{3}}}

2001 ஆம் ஆண்டு மித்ரா தத்தா சிகாகோ நகரத்தில் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.[5]:{{{3}}} 2004 ஆம் ஆண்டு இவர் ஒரு மேன்மை வாய்ந்த பேராசிரியர் என்று இப்பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்றார்.[6]:{{{3}}} மின் மற்றும் கணினி பொறியியல் துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைப் பொறுப்பில் இருந்தார். 2012 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்ற பெயரையும் பெற்றார்.[3]:{{{3}}}[4]:{{{3}}}[5]:{{{3}}} மரபியலர் சோனா குரோதன் இவருக்குப் பின் துணைவேந்தர் பதவிக்கு வந்தார்.

புத்தகங்கள்

[தொகு]

பொனான்களின் நானோ கட்டுமானங்கள் என்ற புத்தகத்தை கேம்பிட்ச்சு பல்கலைக் கழக அச்சகத்தைச் சேர்ந்த மைக்கேல் ஏ சுட்ரோசியோவுடன் இணைந்து 2001 ஆம் ஆண்டில் எழுதினார்.[7]:{{{3}}}. நானோ கட்டுமானங்களின் ஒளியியல் மற்றும் ஒளிமின்னணுவியல் பண்புகள் அறிமுகம் என்ற புத்தகத்தை 2019 ஆம் ஆண்டு சுட்ரோசியோ, வி.வி. மிட்டின், வி.ஏ. கோச்சிலேப் ஆகியோருடன் இணைந்து எழுதினார். கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழக அச்சகம்2019 ஆம் ஆண்டு இப்புத்தகத்தை வெளியிட்டது. மற்றும் பல திருத்தப்பட்ட தொகுதிகளின் ஆசிரியராகவும் மித்ரா தத்தா செயற்பட்டார்.[8]:{{{3}}}

அங்கீகாரம்

[தொகு]

மித்ரா தத்தா 1998 ஆம் ஆண்டு ஒளியியல் சங்கத்தின் உறுப்பினராணார்.[6]:{{{3}}} மின்னியல் மற்றும் மின்னணுவியல் நிறுவனத்தின் பொறியாளர்களின் ஓர் உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டார். பல்லினகட்டமைப்பு அடிப்படையிலான ஒளிமின்னணுவியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த கருவிகளின் பங்களிப்புகளுக்காக இந்த சக உறுப்பினர் தகுதி 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இவருக்கு அளிக்கப்பட்டது.[9]:{{{3}}} மேலும் இச்சங்கம் மித்தா தத்தாவுக்கு ஆரி டைமண்டு நினைவகப் பரிசைக் கொடுத்து சிறப்பித்தது. "புதுமையான வடிவமைப்பு, குணாதிசயம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பல்லினக் கட்டமைப்பு ஒளிமின்னணுவியல் சாதனங்கள் மற்றும் இந்த துறையில் முக்கிய ஆராய்ச்சி திட்டங்களை நிறுவியது போன்ற காரணுங்களுக்காக ஆரி வைர நினைவு விருது மித்ராவுக்கு வழங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு பெண் பொறியாளர்கள் சங்கமும் இவரது சாதனைகளைப் பாராட்டி கௌரவித்தது.

2012 ஆம் ஆண்டில் மித்ரா தத்தா அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினரானார். அமெரிக்க இயற்பியல் கழக சமூக மன்றத்தின் பரிந்துரைக்குப் பிறகு இத்தகுதி இவருக்குக் கிடைத்தது. அரசு மற்றும் கல்வித்துறையில் சமூகத்திற்கான இயற்பியலின் பயன்பாடுகளை ஆதரித்தார்.[10]:{{{3}}} பொதுமக்களுக்கு அணுகல் மற்றும் இயற்பியல் கல்வியை மேம்படுத்தினார். அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகவும் மித்ரா உள்ளார்.[6]:{{{3}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. Birth year from German National Library catalog entry, retrieved 2021-06-22
  2. MacArthur, Kate (September 15, 2015), "How UIC narrows gender gap among science, technology professors", Chicago Tribune
  3. 3.0 3.1 "People on the move: Mitra Dutta, University of Illinois at Chicago", Crain's Chicago Business, July 5, 2012, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
  4. 4.0 4.1 "Mitra Dutta", Members, The Chicago Network, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
  5. 5.0 5.1 "Indian-American engineer-physicist named US varsity VC", Deccan Herald, June 19, 2012, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
  6. 6.0 6.1 6.2 "Mitra Dutta", Profiles, University of Illinois at Chicago Electrical and Computer Engineering, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
  7. Leburton, Jean-Pierre (June 2002), "Review of Phonons in Nanostructures", Acta Crystallographica Section A Foundations of Crystallography, 58 (4): 414–414, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1107/s0108767302009972
  8. Brosseau, Christian (2019), "Review of Introduction to Optical and Optoelectronic Properties of Nanostructures", Optics & Photonics News, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
  9. IEEE Fellows directory, IEEE, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
  10. "Fellows nominated in 2012 by the Forum on Physics and Society", APS Fellows archive, பார்க்கப்பட்ட நாள் 2021-06-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்ரா_தத்தா&oldid=3281676" இலிருந்து மீள்விக்கப்பட்டது