மிதிவெடி நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐ.இராட்சிய இராணுவ பொறியியலாளர் ஈராக்கில் மிதிவெடியினை செயலிழக்கச் செய்வது

மிதிவெடி நடவடிக்கை (mine action) என்பது நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் மிதிவெடி(கண்ணிவெடி)களை அகற்றுவதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மக்களை இவ்அபாயத்தைத் தவிர்ப்பது பற்றி அறிவூட்டும் நடவடிக்கையும் மிதிவெடிகள் அற்ற உலகை உருவாக்குவதும் ஆகும்.

மிதிவெடி நடவடிக்கையானது நிலக்கண்ணிவெடிகளை மாத்திரம் அன்றி பலநாடுகளில் வெடிக்காத வெடிபொருட்கள்(UXO), சூழ்ச்சிப் பொறிகள் போன்றவற்றையும் அகற்றுவதாகும்.

இன்று மிதிவெடி நடவடிக்கையானது "யுத்ததினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை" மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் அகற்றுவதாகும்.

மிதிவெடி நடவடிக்கையின் முக்கிய அம்சங்கள்[தொகு]

  • மிதிவெடிகளை அகற்றுதல் மிதிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகள் மற்றும் யுத்தத்தினால் கைவிடப்பட்ட வெடிகளை அகற்றி அழித்தல்.
நகொர்னொ கரபாஃக்கில் பாடசாலை மாணாவர்களுக்கு மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் பற்றி அறிவூட்டும் ஒட்டிகள்.
  • மிதிவெடி அபாயக் கல்வியை மக்களுக்கு வழங்கி உயிர் மற்றும் உடலாபத்துக்களைக் குறைத்தல்.
  • பாதிக்கப்பட்டவர்களிற்கு மருத்துவ மற்றும் மீண்டும் சமுதாயத்தில் வாழ உதவிகளை வழங்குதல்.
  • மிதிவெடிகளைத் தயாரித்தல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பாவித்தலை நிறுத்துதல்.
  • ஆயுதக் கிடங்கில் உள்ள மிதிவெடிகளை அழித்தல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிவெடி_நடவடிக்கை&oldid=3085876" இருந்து மீள்விக்கப்பட்டது