மிதிம்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிதிம்னா
Μήθυμνα
அமைவிடம்

No coordinates given

Location within the regional unit
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: வடக்கு ஏஜியன்
மண்டல அலகு: லெஸ்போஸ்
நகராட்சி: மேற்கு லெஸ்போஸ்
மேயர்: Dimitris Vounatsos
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 2,255
 - பரப்பளவு: 50.166 km2 (19 sq mi)
 - அடர்த்தி: 45 /km2 (116 /sq mi)
சமூகம்
 - மக்கள்தொகை: 1,570
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (மத்தியில்): 51 m (167 ft)
அஞ்சல் குறியீடு: 811 08
தொலைபேசி: 22530
வாகன உரிமப் பட்டை: MY
வலைத்தளம்
mithymna.gr

மிதிம்னா (Mithymna, (கிரேக்க மொழி: Μήθυμνα, சில சமயங்களில் Methymna என உச்சரிக்கப்படுகிறது) என்பது கிரேக்கத்தின் வடக்கு ஏஜியன், லெஸ்போஸ் தீவில் உள்ள ஒரு நகரம் மற்றும் முன்னாள் நகராட்சி ஆகும். 2019 உள்ளூர் அரசாங்க சீர்திருத்தத்தத்திற்கு பிறகு இது மேற்கு லெஸ்போஸ் நகராட்சியின் ஒரு பகுதியாகவும், அந்த நகராட்சியின் ஒரு அலகாகவும் ஆக்கப்பட்டது.[2] 1919 க்கு முன், இதன் அதிகாரப்பூர்வ பெயர் Μόλυβος - Molyvos ;[3] அந்த பெயர் பைசந்தியன் சகாப்தத்தின் முடிவில் இருந்து வருகிறது, ஆனால் இன்றும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது.

நிலவியல்[தொகு]

மிதிம்னாவின் வான்வழி ஒளிப்படம்

இது இரேசோசுக்கு வடகிழக்கிலும், பிளோமாரிக்கு வடக்கிலும், மிட்டிலீனிக்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.

இந்த நகரமானது ( மக்கள் தொகை 1,399, 2011 கணக்கெடுப்பின்படி) தீவின் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த நகரத்தில் இருந்து பிரபல கடற்கரை நகரமான பெட்டோ சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நகரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று நகரத்தின் நடுவில் உள்ள மலையில் உள்ள பழைய செனோலக் கோட்டை ஆகும். நகரின் அகோராவுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க கடைகள், கஃபேக்கள், உணவகங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதாக உள்ளது.

மிதிம்னாவின் நகராட்சி அலகு, தீவின் வடக்குப் பகுதியில் நகரத்திலிருந்து கிழக்கு நோக்கி நீண்டுள்ளது; இது 50.166 கிமீ² நிலப்பரப்பில் தீவின் மிகச்சிறிய நகராட்சி அலகு ஆகும்.[4] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 2,255 ஆகும். நகராட்சியின் யூனிட்டின் அடுத்த பெரிய நகரங்கள் அர்ஜென்னோஸ் (ம.தொ. 240) மற்றும் சைகாமினியா (207) ஆகும்.

மோலிவோஸ் கடற்கரை லெஸ்போஸில் உள்ள நீலக் கொடி கடற்கரைகளில் ஒன்றாகும். கரையோரம் கூழாங்கற்களால் ஆனது, ஆனால் கடற்பரப்பு முற்றிலும் மென்மையான மணலைக் கொண்டுள்ளது. மேலும் கடலானது கணிசமான தொலைவுக்கு ஆழமற்றதாகவே உள்ளது. அகோரா மற்றும் கோட்டை கடற்கரையிலிருந்து தெரியும்.

மாகாணம்[தொகு]

மிதிம்னா மாகாணம் ( கிரேக்கம்: Επαρχία Μήθυμνας‎ ) லெஸ்போஸ் மாகாணங்களில் ஒன்றாகும். அந்தப் பிரதேசம் தற்போதைய நகராட்சி அலகுகளான மிதிம்னா, அஜியா பரஸ்கேவி, எரெசோஸ்-ஆண்டிசா, கல்லோனி, பெட்ரா ஆகியவற்றைக் கொண்டதாக ஒத்திருந்தது.[5] இந்த மாகாணம் 2006 இல் ஒழிக்கப்பட்டது.

வரலாற்று மக்கள் தொகை[தொகு]

ஆண்டு கிராம மக்கள் நகராட்சி அலகு மக்கள் தொகை
1981 1,427 -
1991 1,333 2,359
2001 1,497 2,433
2011 1,399 2,255

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "Τροποποίηση του άρθρου 1 του ν. 3852/2010" [Amendment of Article 1 of l. 3852/2010]. Government Gazette. p. 1164.
  3. Name changes of settlements in Greece
  4. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece.
  5. "Detailed census results 1991" (PDF). (39 MB)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிம்னா&oldid=3476549" இலிருந்து மீள்விக்கப்பட்டது