மிசான் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசான் ரகுமான்
பிறப்பு(1932-09-16)செப்டம்பர் 16, 1932
தாக்கா, கிழக்கு வங்காளம், இந்தியா
இறப்புசனவரி 5, 2015(2015-01-05) (அகவை 82)
ஒட்டாவா, ஒட்டாரியோ, கனடா
துறைகணிதம்
பணியிடங்கள்கார்லேடன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
தாக்கா பல்கலைக்கழகம்
பிரன்சுவிக் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅடிப்படை மீபெருக்கல் தொடர்புத்தகத்தின் இணை ஆசிரியர்

மிசான் ரகுமான் என்பார் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் நாள் வரை வாழ்ந்தார். இவர் பங்களாதேஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். மீபெருக்கல் தொடர் மற்றும் செங்குத்து அடுக்குக்கோவைகள் ஆகிய கணிதத் துறைகளில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவர் இலக்கியம், தத்துவம், விஞ்ஞான ஐயுறவியம், சுய சிந்தனை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகுந்த ஆர்வங்களை கொண்டிருந்தார். இவர் ஜார்ஜ் கேஸ்பர் என்பாருடன் இணைந்து அடிப்படை மீபெருக்கல் தொடரை [1] எழுதினார். இந்தப் புத்தகம் மீபெருக்கல் ஆய்வுப் பாடத்திற்கான தேர்வு பயிற்சிக்கு சிறந்த படைப்பாக பரவலாகக் கருதப்பட்டது.[2] இவர் பத்து பெங்காலி புத்தகங்களை வெளியிட்டார்.

கல்வி மற்றும் தொழில்[தொகு]

ரஹ்மான் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் தற்போதைய வங்காளதேசமான கிழக்கு வங்காளத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் தாக்கா பல்கலைக்கழகத்தில் படித்தார், அங்கு இவர் 1953 ஆம ஆண்டில் கணிதம் மற்றும் இயற்பியலில் இளங்கலை பட்டமும், 1954 ஆம் ஆண்டில் பயன்பாட்டு கணிதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். 1958 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பி.ஏ பட்டமும், 1963 ஆம் ஆண்டில் இதே பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் எம். ஏ பட்டமும் பெற்றார். 1958 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை தாக்கா பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக இருந்தார். ரஹ்மான் 1962 ஆம் ஆண்டில் கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்திற்குச் சென்று 1965 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.இவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, கார்லேடன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், பின்னர் தலைமை பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பேராசிரியராக ஓய்வு பெற்ற பிறகு, தனது பணியின் எஞ்சிய பகுதியைக் கழித்தார். [3] இவர் எதிர்பாராத விதமாக 2015 ஆம் ஆண்டில் சனவரி மாதம் 5 ஆம் நாள் தனது 82 வயதில் ஒட்டாவாவில் இறந்தார்.

எழுதுதல் மற்றும் பிற செயல்பாடுகள்[தொகு]

இவர் கற்பித்தலிலும் மேலும் கல்வி நடவடிக்கைகளிலும் சிறப்பாக பணி புரிந்தார். ரஹ்மான் பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக வங்காளதேசம் தொடர்பான விஷயங்களை எழுதினார்.[4]. இவர் இணைய வலைப்பதிவுகள் மற்றும் பல்வேறு இணைய மின் இதழ்களுக்கு பங்களித்தார். [5] முக்கியமாக பெங்காலி மொழியில், இவரது ஆர்வம் அதிகமாக இருந்ததது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் பெங்காலி மாத வ போர்ஷியில் என்ற வெளியீடுக்கு தொடர்ந்து பங்களித்தார்.[6]

இவர் சுதந்திர பகுத்தறிவுவாதிகள், சந்தேகவாதிகள், நாத்திகர்கள் மற்றும் மனிதநேயவாதிகளின் இணைய சபையான முக்டோ-மோனாவின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[7]

கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

  • சிறந்த ஆசிரியர் விருது (1986)
  • பாரத கணித பரிஷத்தில் (இந்திய கணித சங்கம்) வாழ்நாள் உறுப்பினர்
  • பங்களாதேஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினர் (2002)
  • பங்களாதேஷ் பப்ளிகேஷன்ஸ் (ஒட்டாவா) வழங்கும் சிறந்த விருது (1996)


புத்தகங்கள்[தொகு]

English

  • Basic Hypergeometric Series (co-author)
  • Special Functions, q-Series and Related Topics (co-editor)[8]
  • The Little Garden in the Corner (prose)

Bengali

  • তীর্থ আমার গ্রাম (Tirtha is my village) (1994)
  • লাল নদী (The Red River) (2001)
  • অ্যালবাম (Album) (2002)
  • প্রসঙ্গ নারী (Context - Women) (2002)
  • অনন্যা আমার দেশ (Ananya is my country) (2004)
  • আনন্দ নিকেতন (Ananda Niketan) (2006)
  • দুর্যোগের পূর্বাভাস (Premonition) (2007)
  • শুধু মাটি নয় (Not just soil) (2009)
  • ভাবনার আত্মকথন (Autobiography of thought) (2010)
  • শূন্য (Zero) (2012)
  • শূন্য থেকে মহাবিশ্ব With Avijit Roy(The universe from zero)(2015)

மேற்கோள்கள்[தொகு]

  1. George Gasper and Mizan Rahman, Basic Hypergeometric Series, first edition, 1990; second extended edition, 2004, Encyclopedia of Mathematics and Its Applications, 96, Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-83357-8.
  2. MR1052153: 797 citations of first edition; MR2128719: 469 citations of second edition (August 25, 2015).
  3. R. Askey, M.E.H. Ismail and E. Koelink, Mizan Rahman, His Mathematics And Literary Writings, pp. 1–28 in Theory and Applications of Special Functions, Dev. Math. 13, Springer-Verlag, 2005.
  4. Mizan Rahman's Article Page in Mukto-Mona
  5. Dr. Mizan Rahman Speaks to VOA About His Writings
  6. "Porshi Press release 2009". Archived from the original on 2016-08-12. பார்க்கப்பட்ட நாள் 2010-03-29.
  7. The list of Mukto-Mona Advisory Board & Editorial Board
  8. Special Functions, q-Series and Related Topics, Fields Institute Communications, volume 14, American Mathematical Society, Providence, 1997.

வெளிஇணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசான்_ரகுமான்&oldid=3887874" இலிருந்து மீள்விக்கப்பட்டது