மிகை எண்ணிக்கையிலான வேர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகை எண்ணிக்கையிலான வேர்கள் (Supernumerary root) என்பது இருக்க வேண்டியதைவிட விட அதிக எண்ணிக்கையில் பற்களில் வேர்கள் காணப்படும் நிலையினைக் குறிப்பதாகும். பொதுவான இந்த பிரச்சனை கீழ் தாடையெலும்பில் காணப்படும். கோரை, முன்கடைவாய்கள் மற்றும் கடைவாய்ப்பற்கள், குறிப்பாக மூன்றாவது கடைவாய்ப்பற்களில் காணப்படும். மேல் தாடையெலும்பில் முதல் முன் கடைவாய்பற்கள் தவிர, கோரை பற்களில் காணப்படும் மிக எண்ணிகையிலான வேர்கள் காணப்படும். பெரும்பாலான முன் கடைவாய் பற்கள் ஒரே ஒரு வேரைக் கொண்டிருக்கும். மேல்தாடை எலும்பில் முதல் முன்கடைவாய் பற்கள் மற்றும் மண்டிபுலர் மோலர்கள் பொதுவாக இரண்டு வேர்களைக் கொண்டிருக்கும். பின் கடைவாய் பற்கள் பொதுவாக மூன்று வேர்களைக் கொண்டிருக்கும். இந்த பற்களில் ஏதேனும் ஒரு கூடுதல் வேர் காணப்பட்டால், அதி எண்ணிக்கையிலான வேர் நிலை என்று விவரிக்கப்படுகிறது. இந்நிலை பல்லுட்புறச் சிகிச்சையின் போதும் பற்கள் குறித்த துல்லியமான தகவல்கள் தேவைப்படும்போது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்