மா டோங் சியோக்கு
மா டோங் சியோக்கு | |
---|---|
![]() | |
பிறப்பு | லீ டோங் சியோக்கு மார்ச்சு 1, 1971 சியோல், தென் கொரியா |
மற்ற பெயர்கள் | டான் லீ |
கல்வி | கொலம்பஸ் மாநில சமூகக் கல்லூரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
மா டோங் சியோக்கு அல்லது டான் லீ (ஆங்கில மொழி: Ma Dong seok) (பிறப்பு: மார்ச்சு 1, 1971) என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 'ரெயின் டு பூசன்'[1] போன்ற அடுத்தடுத்த பல திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தென் கொரியாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவரானார். இவர் 2018 இல் கேலப் கொரியாவின் ஆண்டின் சிறந்த திரைப்பட நடிகராகவும் இருந்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'கில்காமேசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
இவர் மார்ச் 1, 1971 இல் தென் கொரியாவில் சியோல் நகரில் பிறந்தார்.[3] இவருக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது.[4] இவர் தனது இளமை பருவத்தில் அமெரிக்காவில் உள்ள ஒகையோ மாநிலத்திற்கு குடிபோனார். கல்லூரி படிப்பை கொலம்பஸ் மாநில சமூகக் கல்லூரியில் பயின்றார், பின்னர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடர மீண்டும் தென் கொரியாவுக்கு வந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "'Train to Busan' takes Don Lee to Hollywood". The Korea Times. September 28, 2016.
- ↑ Gonzalez, Umberto (April 17, 2019). "Marvel Studios Taps Ma Dong-seok for 'The Eternals' (Exclusive)". TheWrap. https://www.thewrap.com/marvel-studios-ma-dong-seok-the-eternals/.
- ↑ "마동석-예정화, 3개월째 교제중이다". 허프포스트코리아 (கொரியன்). Huffington Post. 18 November 2016. 14 செப்டம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 அக்டோபர் 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Actor Ma Dong-seok Cast in New Marvel Film". Chosun Ilbo. 2019-07-23 அன்று பார்க்கப்பட்டது.