மாவட்ட கால்நடை பண்ணை, ஒரத்தநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவட்ட கால்நடை பண்ணை, ஒரத்தநாடு என்பது தமிழ்நாடின், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் நடுவூரில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும்.[1] இங்கு சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீவன வளர்ப்பு, கால்நடை கொட்டகைகள், உழவர் பயிற்சி மையம் ஆகியவை அமைந்துள்ளன.[2] இப்பண்ணையில், முர்ரா எருமைகள், லார்ஜ் ஒயிட் யார்க்‌ஷயர் பன்றி இனம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[3]

இந்த கால்நடைப் பண்ணை வளாகத்தில் 177.92 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியானது 2012ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்". குறிப்பு. இந்து தமிழ் (2017 ஆகத்து 5). பார்த்த நாள் 9 மே 2019.
  2. "ஒரத்தநாடு கால்நடை பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு !". செய்தி. அதிரை நியூஸ் (2015 சூன் 20). பார்த்த நாள் 9 மே 2019.
  3. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010". கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 8 மே 2019.
  4. "ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி: முதல்வர் திறந்துவைத்தார்". செய்தி. தினமணி (2012 அக்டோபர் 10). பார்த்த நாள் 9 மே 2019.