மாளவிகா ஹரிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளவிகா ஹரிதா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
பட்டம்முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி
சாட்சி & சாட்சி ஃபோகஸ்

மாளவிகா ஹரிதா, இந்தியாவின் பெங்களூரூவைச் சேர்ந்த பெண் வணிக நிர்வாகியாவார். விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான சாட்சி & சாட்சி ஃபோகசின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ள இவர், தற்போது பிராண்ட் சர்க்கிள் என்ற நிறுவனத்தை தொடங்கி அதற்கு தலைமையேற்று நடத்தி வருகிறார்.[1] மாளவிகா, பெங்களூரு விளம்பர சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1978 ஆம் ஆண்டில் பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை படிப்பை முடித்துள்ள மாளவிகா, சம்பத் குமரன் & கோ என்ற நிறுவனத்தில் 1978 - 1979 ஆண்டுகளில், தனது தொழில் வாழ்க்கையை கணக்கு பதிவாளராகத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூருவில் தனது சந்தைப்படுத்தல் மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற முகாமைத்துவத்தில் முதுகலை பட்டய படிப்பை முடித்துள்ளார், பின்னர் தனது பணிகளில் முழுமூச்சாக இயங்கி வந்த இவர், 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா வணிகப்பயிற்சி பள்ளியில், இணையவழி சந்தைப்படுத்துதல் பட்டய படிப்பை முடித்து வாடிக்கையாளர் ஈடுபாடு, சமூக ஊடகம், திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு போன்றவைகளில் கவனம் செலுத்தியுள்ளார். மேலும் இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூருவில் கற்பித்தல் முறைகளில் நிர்வாகக் கல்வித் திட்டம் என்பதிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3]

தொழில்[தொகு]

இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூருவில் கணக்கியல் பயிற்சி மற்றும் முதுகலை வணிக மேலாண்மை படித்த பிறகு மாளவிகா, பெங்களூர் எச்எம்டி கடிகார நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் முத்ரா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு, 1993 ஆம் ஆண்டில் சாட்சி நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு அவர் தனது சொந்த உள்துறை வடிவமைப்பு மற்றும் பொதி நிறுவனத்தை நடத்தியுள்ளார். மாளவிகா லண்டன், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள சாட்சி & சாட்சி அலுவலகங்களில் சிறிதுகாலம் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு முதுகலை மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் வர்த்தக குறியீடு மேலாண்மை போன்றவைகளை கற்பித்து வருகிறார்.[4]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களூர் வழங்கும் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதைப் பெற்ற முதல் பெண் மாளவிகா ஆவார்.[5] உலகமயமாக்கல் குறித்த லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் லார்ட் மேகநாத் தேசாய் கீழ் சிறப்பு திட்டத்திற்காக பிரித்தானிய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குருகுல வகைப்பாட்டு அறிஞர்களில் இவரும் ஒருவர். ஐஐஎம்பியில் நிறுவன தின விரிவுரையை வழங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் மாளவிகா பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா_ஹரிதா&oldid=3925559" இலிருந்து மீள்விக்கப்பட்டது