மேக்நாத் தேசாய்
மேக்நாத் தேசாய் Meghnad Desai | |
---|---|
பிறப்பு | 10 சூலை 1940 (அகவை 84) வடோதரா |
படித்த இடங்கள் |
|
பணி | பொருளியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர், அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை/கள் | கிஷ்வர் தேசாய், Gail Graham Wilson |
குழந்தைகள் | Tanvi Desai, Nuala Desai, Sven Desai |
மேக்நாத் தேசாய் (Meghnad Jagdishchandra Desai, Baron Desai10 சூலை 1940) என்பவர் இந்தியாவில் பிறந்த இங்கிலாந்து நாட்டின் பொருளியல் அறிஞர் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். [1]
பிறப்பும் படிப்பும்
[தொகு]மேக்நாத் தேசாய் குசராத்து மாநிலம் வடோதராவில் பிறந்தார். பள்ளிக்கல்விக்குப் பிறகு இளங்கலைப் பட்டப் படிப்பை ராம் நாராயண் ரூயா கல்லூரியிலும் முதுகலைப் படிப்பை மும்பை பல்கலைக் கழகத்திலும் முடித்தார். பெனிசில்வேனியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து 1963ஆம் ஆண்டில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
பணிகள்
[தொகு]ஆய்வுப் பட்டம் பெற்ற பிறகு பல நிறுவனங்களில் பணி ஆற்றினார். லண்டன் பொருளியல் பள்ளியில் விரிவுரையாளராக இருந்து பணி ஆற்றினார். புகழ் வாய்ந்த செய்தி இதழ்களில் பத்தி எழுத்தாளராகப் பொருளியல் தொடர்பான கட்டுரைகளை எழுதினார். கல்வி நிலையங்களின் இதழ்களிலும் கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிசு ராடிகல் வீக்லி டிரிபியூனல், இந்தியன் பிசினெஸ் டெய்லி, இந்தியன் எக்சுபிரசு, பைனான்சியல் எக்சுபிரசு போன்ற செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதினார்.
எழுதிய நூல்களில் சில
[தொகு]மேக்நாத் தேசாய் 25 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பொருளியல் மற்றும் அரசியல் கட்டுரைகள் 200க்கும் மேலாகப் பல்வேறு செய்தித் தாள்களிலும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.[2] 1973 இல் மார்க்சிய பொருளியல் கோட்பாடு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. 1976 இல் அப்லைட் எக்கனாமிக்ஸ் என்ற நூலை எழுதி வெளியிட்டார். 2002 இல் மார்க்சின் ரீவெஞ் என்ற நூல் வெளி வந்து பிரபலமானது. இந்தித் திரைப்பட்ட நடிகர் திலீப் குமார் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இங்கிலாந்தில் பல கட்சிகளிலும் நிறுவங்களிலும் உறுப்பினர் ஆனார். பிரிட்டிசு தொழிலாளர் கட்சி பின்சுபரி தொகுதி லேபர் கட்சி, இல்லிங்க்டன் சவுத் ஆகிய கட்சிகளில் சேர்ந்து அரசியல் பணி ஆற்றினார். 2011இல் பிரிட்டிசு பிரபுக்கள் மன்றத்தின் அவைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
பதவிகளும் பட்டங்களும்
[தொகு]வெஸ்ட்மின்ஸ்டர் செயின்ட் கிளமண்ட் டேன்ஸ் என்னும் அமைப்பில் இவருக்கு பரோன் தேசாய் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது இவர் தொடங்கிய உலக ஆளுகையின் ஆய்வு என்ற அமைப்பின் இயக்குநர் பொறுப்பிலிருந்து 2003 ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார் லண்டன் பொருளியல் பள்ளியின் எமரிட்டஸ் பேராசிரியராக இருக்கிறார். 2008 இல் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.