மாலைதீவுகளின் சின்னம்
மாலைதீவுகளின் பொறியானது ஒரு தென்னை மரத்தை மத்தியில் கொண்டு அதன் இரு புறங்களிலும் சாய்வாக இரு தேசிய கொடிகளை ஏந்திய கம்பங்களையும் இக்கம்பங்களுக்கு மத்தியில் பிறையையும் நடசத்திரத்தையும் கொண்டது. நாட்டின் உத்தியோகபூர்வ சுதேச பெயர் எழுதப்பட்ட பெயர் பட்டியும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]தென்னை மரம் மக்களின் வாழ்வாதாரத்தை குறிக்கிறது. மாலைத்தீவு மக்கள் தென்னை மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுகின்றனர். அது மருத்துவம் தொடக்கம் கப்பல் கட்டுதல் வரை பயன் தருகின்றது என்பது அவர்களின் கருத்தாகும். பிறையும் நட்சத்திரமும் இஸ்லாமிய விசுவாசத்தை குறிக்கிறது.
நாட்டின் சுதேச பெயரான அத்-தாஃவ்லத் அயி-மகால்தீபியா (அரபு: الدولة المحلديبية) என்ற பெயர் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இது 1000 தீவுகளின் நாடு என பொருள்படும்.
பாவனை
[தொகு]இது மாலைத்தீவுகள் அரசின் அடையாளச் சின்னமாகும். இது அரசின் அதிகாரபூர்வ கடித தலைப்புகளின் உச்சியில் பயன்படுத்தப்படுகிறது.