மார்ஜோரி காட்ப்ரே
மார்ஜோரி காட்ப்ரே (Marjorie Godfrey)(29 மார்ச் 1919 - 27 அக்டோபர் 2003) ஐந்தாவது மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் ஆங்கிலோ-இந்தியருக்கா பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற நியமன உறுப்பினர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மார்ஜோரி 1919ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஆந்திராவின் ஐதராபாத்தில் பிறந்தார். இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]
தொழில்
[தொகு]கல்வியாளரான, காட்ப்ரே 17 ஆண்டுகள் தேர்வுகள் மற்றும் தேர்வுகளுக்கான கண்காணிப்பாளராகச் செயல்பட்டார்.[2] ஐதராபாத் கத்தோலிக்க சங்கத்தை நிறுவினார்.[3] 197-ல் ஐந்தாவது மக்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[4] இதற்கு முன், இவர் நான்கு ஆண்டுகள் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராகவும், அகில இந்திய ஆங்கிலோ-இந்தியன் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]
காட்ப்ரே மத்திய சமூக நல ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார். ஆங்கிலோ-இந்தியக் கல்விக்கான மாநிலங்களுக்கு இடையேயான வாரியத்தில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]10 சனவரி 1949-ல், மார்ஜோரி ஆலன் காட்ப்ரேவை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.[1] இவர் 27 அக்டோபர் 2003 அன்று மாரடைப்பு காரணமாக இறந்தார். ஆந்திரப் பிரதேச தேவாலய குழு மற்றும் ஐதராபாத் கத்தோலிக்க சங்கம் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தன.
மார்ஜோரி மகள் தெல்லா காட்ஃபிரேயும் ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Members Bioprofile: Godfrey, Shrimati Marjorie". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ 2.0 2.1 "Thirteenth Loksabha: Session 14 Date: 05-12-2003". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ 3.0 3.1 "Marjorie Godfrey dies". https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/marjorie-godfrey-dies/article27806157.ece. பார்த்த நாள்: 2021-05-24.
- ↑ Careers Digest.