தெல்லா காட்ஃபிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்லா காட்ஃபிரே
Della Godfrey
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
1994–2004
தொகுதிஆங்கிலோ இந்திய நியமனம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு23 ஏப்ரல் 2019
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

தெல்லா காட்ஃபிரே (Della Godfrey) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் ஆங்கிலோ-இந்திய உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். சட்டமன்றத்தில் தெல்லா இரண்டு முறை பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

காட்ஃபிரே ஐதராபாத்து நகரத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை ஆலன் காட்ஃபிரே ஐதராபாத் நிசாமின் இராயல் மின்ட் நிறுவனத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். தாயார் மார்யோரி காட்ஃபிரே ஒரு கல்வியாளராவார். சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தெல்லா காட்ஃபிரே ரோசாரி கன்னிமட உயர்நிலைப் பள்ளியிலும் கோட்டி மகளிர் கல்லூரியிலும் பயின்றார். இராயல் டச்சு விமான நிறுவனத்தில் மேலாளராக தெல்லா பணிபுரிந்தார். இரண்டு முறை ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் நாளன்று தெல்லா காட்ஃபிரே இறந்தார். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hyderabad: Former nominated MLA Della Godfrey passes away". Telangana Today. 23 April 2019. Archived from the original on 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Della Godfrey dies after cardiac arrest". Deccan Chronicle. 24 April 2019. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  3. "Former MLA Della Godfrey passes away". The Times of India. 24 April 2019. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்லா_காட்ஃபிரே&oldid=3559005" இலிருந்து மீள்விக்கப்பட்டது