உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்கெசான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கேசான்
‘இயோ கெனாட்டா (வடக்கு மார்க்கெசான்)
‘இயோ ‘எனானா (தெற்கு மார்க்கெசான்)
பிராந்தியம்மார்க்கெசசுத் தீவுகள், தகிட்டி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~11,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
mrq — [[வடக்கு மார்க்கெசான்]]
mqm — [[தெற்கு மார்க்கெசான்]]
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மார்க்கெசான் மொழி என்பது, மார்க்கெசக் குழுவில் உள்ள, கிழக்கு-நடுப் பொலினீசியக் கிளைமொழித் தொகுதியைச் சேர்ந்த ஒரு மொழியைக் குறிக்கும். இம் மொழிகள் பிரெஞ்சுப் பொலினீசியாவின் மார்க்கெசசுத் தீவுகளில் பேசப்படுகின்றன. இம்மொழிகளைப் புவியியல் அடிப்படையில் வடக்கு மார்க்கெச மொழிகள், தெற்கு மார்க்கெச மொழிகள் என இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

வடக்கு மார்க்கெசக் கிளைமொழிகள், உவா பு, நுக்கு இவா ஆகிய தீவுகளிலும், தெற்கு மார்க்கெசக் கிளைமொழிகள் இவா ஓவா, தகுவாத்தா, பாத்து இவா ஆகிய தீவுகளிலும் வழக்கில் உள்ளன. உவா உக்கா தீவைச் சேர்ந்த கிளைமொழிகளைச் சிலர் வடக்கு மார்க்கெச மொழியாக வகைப்படுத்துவது உண்டு. ஆனாலும், இவை மாறுநிலை மொழிகளாகும். இத்தீவு வடக்கு மார்க்கெசசுப் பகுதிக்குள் அடங்கியிருந்தாலும், இங்கு பேசப்படும் கிளைமொழிகள் தெற்கு மார்க்கெச மொழிகளுடன் உருபனியல், ஒலியனியல் அடிப்படையிலான ஒற்றுமைகளைக் கொண்டனவாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கெசான்_மொழி&oldid=1427713" இலிருந்து மீள்விக்கப்பட்டது