உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கரெட் பர்பிட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் பர்பிட்ஜ்
பிறப்புஎலினார் மார்கரெட் பர்பிட்ஜ்l அல்லது பீச்சே
ஆகத்து 12, 1919 (1919-08-12) (அகவை 105)
தேவன்போர்ட், இங்கிலாந்து
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுவானியற்பியல், அரசு கழக உறுப்பினர்
விருதுகள்வானியலுக்கான எலன் பி.வார்னர் பரிசு (1959)
தேசிய அறிவியல் பதக்கம் (1983)
அறிவியலுக்கான ஆல்பர்ட் அய்சுட்டீனின் உலக விருது (1988)

எலினார் மார்கரெட் பர்பிட்ஜ் (Eleanor Margaret Burbidge) (née பீச்சே), FRS (பிறப்பு ஆகத்து 12, 1919 (பிறப்பிடம் பெருமாஞ்செசுட்டர் சார்ந்த தவன்போர்ட்) ஒரு பிரித்தானிய அமெரிக்க வானியற்பியலாளர். இவர் வானியலில் பல அரிய ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றவர். மேலும் அரசு கிரீன்விச் வான்காணக இயக்குநர் உட்பட பல ஆட்சியியல் பதவிகளை வகித்தவர்.

இவர் தன் வாழ்நாளில் இலண்டன் பல்கலைக்கழக வான்காணகத்திலும் சிகாகோ நகர யெர்க்கேசு வான்காணகத்திலும் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள கேவண்டிழ்சு ஆய்வகத்திலும் சாண்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார் . இவர் தான் 1962 இல் இருந்து பணியாற்றிவந்த 1979 முதல் 1988 வரை கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல், விண்வெளி அறிவியல் மையத்தின் முதல் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

கல்வியும் வாழ்க்கைப்பணியும்

[தொகு]

இவர் 1936 இல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் வானியல் கற்கத் தொடங்கி. 1939 இல் இலவல் பட்ட்த்தைப் பெற்ரார். பின்னர் அங்கே தன் முனைவர் பட்ட்த்தை1943 இல் பெற்றார். இவருக்கு வாழ்சிங்டன் சிகாகோ நிறுவனத்தின் கார்னிகி ஆய்வுநல்கை மறுக்கப்பட்டது அப்போது இந்நல்கை பெறுபவர் மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிபவராகவும் அவர் கட்டாயமாக ஆணாகவும் இருக்கவேண்டும் என்பதாலேயே மறுக்கப்பட்டுள்ளது.[1]

இவர் 1950 இல் வின்கான்சின், வில்லியம்சுபேவில் உள்ள யெர்க்கேசு வான்காணக ஆய்வுநல்கைக்கு விண்னப்பித்துள்ளார். மேலும் இவர் 1951 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்துள்ளார். இவரது ஆய்வு விண்மீன்களில் உள்ள வேதிச்செறிவுகளில் குவிந்திருந்த்து. பின்னர் 1953 இல் இலண்டனுக்கு மீண்டு தன் கணவரான ஜியோஃப்ரி பர்பிட்ஜுடனும் வில்லியம் ஆல்ஃபிரெடு பவுலருடனும் பிரெட் ஆயிலுடனும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். பர்பிட்ஜ் இணையரின் செய்முறை, நோக்கீட்டுத் தரவுகளைக் கொண்டு இக்குழு விண்மீன்களில் உள்ளே நிகழும் அனுக்கரு வினைகளால்தான் அனைத்து வேதித் தனிமங்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்ற கருதுகோளை உருவாக்கியது. இதனால் உருவாகிய வானியற்பியல் கோட்பாடு 1957 இல் வெளியிடப்பட்டது. இது B2FH கோட்பாடு என, ஆய்வில் இணைந்தவர்களின் (Burbidge, Burbidge, Fowler, Hoyle-B2FH ) பெயரால் வழங்கப்பட்டது.[2] இக்கோட்பாடு வானியற்பியலில் அடிப்படை ஆய்வுக்கு பேருந்துதல் அளித்தது.

பத்தாண்டுகட்குப் பின்னர் , 1955 இல் இறுதியாகத் தன் கனவரின் உதவியளர் என்ற போர்வையில் மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் நுழைந்துள்ளார். நிலைய மேலாண்மை இதைக் கண்டுபிடித்த்தும் அவரை அங்கே பணிபுரிய இசைந்துள்லனர். ஆனால் இருவரும் மலைச்சாரலில் கீழே தனியாக ஒரு குடிலில் தங்குமாறும் மேலே உள்ள பொது ஆடவருக்கு மட்டுமேயான விடுதியில் தங்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இவர் 1972 இல் அரசு கிரீன்விச் வான்காணகத்தினியக்குநர் ஆனார். இம்முரைதான் 300 ஆண்டுகட்குப் பிறகு இயக்குநர் பதவி அரசு வானியலாளருக்கு மாற்றாக கதிர்வீச்சு வானியலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிறகு இப்பதவிக்கு நோபல் பரிசாளரான [[மார்ட்டின் இரைலுக்குத் தரப்பட்ட்து. இவர் 1974 இல், பதவியேற்ற 15 மாதங்கட்குப் பின்னர். அய்சக் நியூட்டன் தொலைநோகியை இதைவிட பயன்மிக்க வான்காணகத்துக்கு மாற்றப்பட நேர்ந்த முரண்பாடு எழுந்ததால் பதவி விலகியுள்ளார்.

இவர் வானியலில் பால்வேறுபாடு கட்டுவதை எதிர்த்துப் போராடினார். இதற்காக தனக்கு வழங்கப்பட்ட அமெரிக்க வானியல் கழக மகளிருக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை ஏற்க மறுத்தார். இவர் பெண்களுக்குச் சார்பாகவோ எதிர்த்தோ காட்டப்படும் பால்பாகுபாட்டைநீக்கவேண்டும் என அறைகூவல் விடுத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு அக்கழகம் மிக உயர்தகைமை விருதாகிய என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகவு பால்வேறுபாடின்றி வழங்கப்பட்டது.[3]

இவர் 1976 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆனார்.[4] இவர் 1977 இல் அமெரீக்க குடியுரிமையைப் பெற்றார். மேலும் 1981 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஆனார்;[4] இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் இணைத்தலைவராகவும் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவரது வாழ்க்கைப்பணிகளையும் அறிவியல்தகைமைகளையும் கருதி கலிபோர்னியா மகளிர் அருங்காட்சியக புகழ்முற்றத்தில் 2003 இல் இணைக்கப்பட்டார்.[5]

குடும்பம்

[தொகு]

மார்கரெட் பீச்சே 1948 ஏப்பிரல் 2 இல் ஜியோஃப்ரி பர்பிட்ஜை மண்ந்தார். இவரொரு வானியற்பியலாளர். இருவரும் இணைந்து அந்நூற்றாண்டின் அரிய குறிப்பிடத்தகுந்த வானியற்பியல் கோட்பாடுகளில் ஒன்றை உருவாக்கினர்.. இவர்களுக்குச் சாரா என்றொரு மகள் 1956 இல் பிறந்தார். இவரது கணவர் ஜியோஃப்ரி பர்பிட்ஜ் 2010 இல் இறந்து விட்டார்.[6]

அறிவியல் பங்களிப்புகள்

[தொகு]

இவர் 1943 இல் தன் முனைவர் பட்ட்த்தைப் பெற்றதும், தொலைநோக்கிகளோடு கதிர்நிரல்வரைவிகளை இணைத்து பால்வெளிகளை ஆய்வு செய்யலானார். இவர் அமெரிக்க யெர்க்கேசு வான்காணகத்தில் B வகை விண்மீன்களையும் பால்வெளிக் கட்டமைப்பையும் ஆய்வு செய்தார்.

இவர் 1957 இல் B2FH குழு விண்மீன்கள், சில எடை குறைந்தவற்றைத் தவிர, தம்முள்ளே அனுக்கரு வினைகள் வழியாக வேதித் தனிமங்களை உருவாக்குவதைக் கண்ணுற்றார்.இதற்கு 1959 இல் வார்னர் பரிசு ஆய்வாளர்களுக்குத் தரப்பட்டது. பின்னாளைய ஆய்வில் இவர்தான் முதன்முதலாக பால்வெளிகளின் பொருண்மைகளையும் சுழற்சிவரையையும் கண்டறிந்தார். இவர் குவேசார்கள் எனப்படும் பகுதிக் கதிர்வீச்சு உடுக்கணப் பொருள்களின் ஆய்விலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இவர் சாண்டிகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1990 இல் ஆப்புள் தொலைநோக்கித் திட்ட்த்தில் மங்கற்பொருள் காணும் கதிர்நிரல் வரைவி உருவாக்கத்தில்உதவியுள்ளார். இப்போது இவர் அங்கே இயற்பியல் தகவுறு பேராசிரியராக தொடர்ந்து இயல்செம்பெயர்ச்சி பற்ரியும் செந்தரம்சாரா அண்டவியல்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.[7] Burbidge has contributed to over 370 articles on astronomical research.[5]

தகைமைகள்

[தொகு]

விருதுகளும் பரிசுகளும்'

இவர் பெயரிடப்பட்டவை

References

[தொகு]
  1. Rubin, Vera C. (1997). Bright Galaxies, Dark Matters. Woodbury, N.Y.: American Institute of Physics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56396-231-4.
  2. Rubin, Vera C. (1981) "E. Margaret Burbidge, President-Elect". Science 211(4485) pp. 915-916 http://www.jstor.org/stable/1686280
  3. "Henry Norris Russell Lectureship". American Astronomical Society. Archived from the original on 28 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 Yount, Lisa (1996). Twentieth-century women scientists. New York: Facts on File. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0816031738.
  5. 5.0 5.1 "Margaret Burbidge: 2003 Trailblazer". Women’s Museum of California. Archived from the original on 13 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Faulkner, John (18 February 2010). "Geoffrey Burbidge obituary". The Guardian. http://www.guardian.co.uk/science/2010/feb/18/geoffrey-burbidge-obituary. 
  7. G. Burbidge, E. M. Burbidge, H. C. Arp, W. M. Napier: Ultraluminous X-ray Sources, High Redshift QSOs and Active Galaxies. Preprint (2006)
  8. "Book of Members, 1780–2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் July 25, 2014.
  9. "E. Margaret Burbidge". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
  10. "The President's National Medal of Science: Recipient Details - E. MARGARET BURBIDGE". National Science Foundation. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
  11. "Albert Einstein World Award of Science 1988". Archived from the original on ஜூன் 7, 2014. பார்க்கப்பட்ட நாள் August 13, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

[1] பரணிடப்பட்டது 2016-10-06 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_பர்பிட்ஜ்&oldid=3591056" இலிருந்து மீள்விக்கப்பட்டது