உள்ளடக்கத்துக்குச் செல்

மாரியூர் பூவந்திநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரியூர் பூவந்திநாதர் கோயில் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மாரியூர் கிராமத்தின் கடற்கரையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1] மிகப் பழமைவாய்ந்த இக்கோவில் இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னரால் கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. ஒப்பிலான், சாயல்குடி, கடுகுசந்தை, பாடுவானேந்தல், சாத்தான்குடி, செல்வனூர், போன்ற கிராமங்களிலிருந்து மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் இயற்கை சீற்றங்களால் மண்ணில் புதைந்து மீண்டும் இக்கோவில் உருவானதாக கூறுகின்றனர்.[2]

சிறப்பு

[தொகு]

இங்குள்ள விநாயகர் சிலையை தட்டினால் கணீர் என ஒலி எழுப்பக்கூடியளவில் உள்ளது. இராமநாதபுர சேதுபதி சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சுரங்க பாதை

[தொகு]

இக்கோவிலிலிருந்து உத்தரகோசமங்கை வரை சுரங்கப்பாதை இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. க.தனசேகரன் (2022-05-31). "இழந்த பதவியும் சொத்தும் மீண்டும் கிடைக்கும்!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-06-20. {{cite web}}: External link in |website= (help)
  2. Jayabalan, Suriyakumar. "Pooventhiya Nathar: குழந்தை பாக்கியம் தரும் தலம்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.