கடலாடி (வட்டம்)
கடலாடி வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கடலாடி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் எஸ். தாரைக்குடி, சாயல்குடி, ஆப்பனூர், கடலாடி, மேலச்செல்வனூர் மற்றும் சிக்கல் எனும் 6 உள்வட்டங்களும் 45 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2] அவைகள்:
- A. நெடுங்குளம்
- A.உசிலங்குளம்
- அளவங்குளம்
- ஆப்பனூர்
- அவந்தாண்டை
- ஏர்வாடி
- இருவேலி
- இதம்பாடல்
- K .வேப்பங்குளம்
- கடலாடி
- கடுகுசந்தை
- கண்ணிரஜபுரம்
- கீழக்கிடாரம்
- கீழச்செல்வனூர்
- கீரந்தை
- கொக்கரசன் கோட்டை
- கொண்டுநல்லான்பட்டி
- குறிச்சிகுளம்
- குதிரைமொழி
- M .கரிசல்குளம்
- மாரந்தை மாரியூர்
- மீனங்குடி
- மேலக்கிடாரம்
- மேலச் செல்வநூர்
- கீழச் செல்வநூர்
- மூக்கையூர்
- நரிப்பையூர்
- ஓரிவயல்
- ஒருவாநேந்தல்
- பணிவாசல்
- பெயக்களம்
- பெரியகுளம்
- பிராமனங்குளம்
- புனவாசல்
- S .தரைக்குடி
- S .வாகைக்குளம்
- சாயல்குடி
- சிக்கல்
- சிப்பிகுளம்
- சிரைக்குளம்
- T .கரிசல்குளம்
- திருமால் கந்தன் கோட்டை
- T .வேப்பங்குளம்
- தனிச்சியம்
- வாலிநோக்கம்
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 145,277 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 73,448 ஆண்களும், 71,829 பெண்களும் உள்ளனர். 34,065 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 89.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.65% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15789 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,634 மற்றும் 12 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.81% %, இசுலாமியர்கள் 17.29%, கிறித்தவர்கள் 7.62% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.[3]