மாம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாம்பாளையம் கிராமம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில், காவிரி ஆற்றின் கரையில் உள்ள பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் உள்ளது. இது பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்டது. இன்னும் சாயப்பட்டறைகளால் மாசடையாமல் உள்ளது. இந்த ஊரின் நிலங்கள் மேட்டூர் கிழக்குக் கரை வாய்க்கால் மூலம் ஒருபோகம் பாசன வசதி பெறுகிறது. இங்குள்ள மக்கள் நூல் மில், தறி பட்டறை, சாயப் பட்டறைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த ஊரின் மற்றொரு சிறப்பு இங்குள்ள அரசுப்பள்ளி. 1975 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011 ல் இருந்து உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 60 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 170 மாணவர்களும், தொடக்கப்பள்ளியில் 100 மாணவர்களும் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டாக 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுகிறது. அதிகபட்சம் 479 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பாளையம்&oldid=2427963" இருந்து மீள்விக்கப்பட்டது