மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்றைய தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமும், ஒரு காலத்தில் பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியதுமான மாமல்லபுரத்தில் பெருமளவில் காணப்படும் குடைவரை கோயில்களில் ஒன்றே தற்காலத்தில் பஞ்சபாண்டவர் மண்டபம் என அழைக்கப்படும் கோயிலாகும். இது கட்டிமுடிக்கப்படாத ஒரு குடைவரை. மூன்று சார்பு உடையதாக அமைந்துள்ள இதன் அமைப்பைப் பார்க்கும்போது, நடுவில் கருவறையையும், சுற்றிலும் மண்டபத்தையும் கொண்ட ஒரு பெரிய கோயிலாகவே திட்டமிடப்பட்டது என்பது விளங்கும். கருவறைக்குப் பின்புறமாக இருக்கவேண்டிய நான்காவது சார்பின் குடைவு வேலைகள் தொடங்கு முன்னரே கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டுவிட்டன.

இதன் முகப்பு ஆறு முழுத்தூண்களையும், இரண்டு அரைத்தூண்களையும் கொண்டுள்ளது. இதன் பின்னால் இதே போன்ற இன்னொரு தூண்வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]