மான் நகரம், ஜோர்தான்
மான் நகரம் (ஆங்கிலம்: Ma'an ) ( அரபு மொழி: مَعان ) என்பது தெற்கு ஜோர்டானில் உள்ள ஒரு நகரம் ஆகும். தலைநகர் அம்மானுக்கு தென்மேற்கே 218 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது மான் மாகாணத்தின் தலைநகராகவும் செயல்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் அதன் மக்கள் தொகை சுமார் 41,055 பேர் ஆகும். நபான் காலத்திலிருந்தே மான் என்ற பெயருடன் கூடிய நாகரிகங்கள் இருந்துள்ளன - நவீன நகரம் பண்டைய நகரத்தின் வடமேற்கே உள்ளது. இந்த நகரம் பண்டைய கிங்ஸ் நெடுஞ்சாலையிலும் நவீன பாலைவன நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ள ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாகும்.
வரலாறு
[தொகு]பொ.ச.மு. 2 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் யேமனை தளமாகக் கொண்ட ஒரு பண்டைய அரபு மக்களான மினியன்ஸ் (அரபியில் "மெய்ன்" என்று அழைக்கப்படுகிறது) என்பவர்களால் மான் நிறுவப்பட்டது.[1] இந்த தளம் ஒரு முக்கிய வர்த்தக பாதையில் அமைந்திருந்தது மற்றும் மினியன் வணிகர்கள் மற்றும் மற்ற வணிகர்களால் குடியேறப்பட்டது.[2] லோத்தின் மகனான "மான்" என்பவரின் பெயரை இந்த நகரம் கொண்டுள்ளது என்பது உள்ளூர் பாரம்பரியம்.[3]
சிரியாவில் பைசாந்தியர்களின் காலத்தில், மான் அரபு கிறிஸ்தவ பழங்குடியினரான பானு சூதாம் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திரான்ஸ்ஜோர்தானில் பைசாந்தியர்களுக்கு அடிமைப் பகுதியாக இருந்துள்ளது.[3] 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மானின் கிறிஸ்தவ ஆளுநர் பர்வா இப்னு அம்ர் அல்-சூதாமி இஸ்லாமிற்கு மாறினார் . மேலும் முகம்மது நபிக்கு ஒரு வெள்ளை கழுதை மற்றும் தங்கம் உட்பட பலவிதமான பரிசுகளை அனுப்பினார். அவர் மதம் மாறியதை அறிந்த பைசாந்திய அதிகாரிகள் அறிந்தபோது, அவரை மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்ப உத்தரவிட்டனர். ஆனால் சூதாமி மறுத்துவிட்டார்.[4] இதன் விளைவாக, பைசாந்திய பேரரசர் இவரை சிறையில் அடைத்து சிலுவையில் அறைய உத்தரவிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மதீனாவில் உள்ள முஸ்லீம் அரசு, மானைக் கைப்பற்ற உசாமா இப்னு சயீத் தலைமையிலான இராணுவத்தை அனுப்பியது. [ மேற்கோள் தேவை ]
காலநிலை
[தொகு]மான் குளிர் பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது (கோப்பன் காலநிலை வகைப்பாடு). வெப்பமான கோடைகாலமும், அதிக உயரம் (1000 மீட்டருக்கு மேல்) காரணமாக லேசான குளிர் குளிர்காலமும் கொண்டது.ஆண்டுக்கு சராசரியாக 44 மி.மீ மழைப்பொழிவு என்பதே மிகவும் அரிதானது.
புள்ளி விவரங்கள்
[தொகு]1845 ஆம் ஆண்டில் மான் அல்-ஹிஜாசியாவில் 200 வீடுகளும், மான் அல்-ஷாமியா 20 குடும்பங்களும் இருந்தன.[5] 1912 ஆம் ஆண்டில் கார்ல் பேடெக்கர் அதன் மக்கள் தொகை 3,000 ஆக இருக்கும் என்று மதிப்பிட்டார், அதே எண்ணிக்கை 1932 இல் கையேடு ப்ளூ என்பவரின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது. 1956 வாக்கில் மானின் மக்கள் தொகை 4,500 ஐ எட்டியது, 1973 இல் இது 9,500 ஆக இருந்தது.[3] 1961 ஆம் ஆண்டில், மான் மக்கள் தொகை 6,643 என்ற அளவில் இருந்தது. மானில் இப்போது 75000 என்ற மக்கள் தொகை கொண்ட 5 பெரிய பழங்குடியினர் உள்ளனர்.[6]
பொருளாதாரம்
[தொகு]குறைக்கப்பட்ட வருமான வரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற அபிவிருத்தி பகுதி இங்குள்ளது. ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் வரி உட்பட வேறு எந்த வரிகளும் விதிபதில்லை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுங்குமுறை நடைமுறைகள் உள்ளன. இங்கு தொழில்துறை பூங்காவின் கட்டுமானம் ஒன்று 2008 இல் தொடங்கப்பட்டுள்ளது. அது 2030 இல் முடிக்கப்பட உள்ளது.. சம்சு மான் சூரிய மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது.[7]
குறிப்புகள்
[தொகு]- ↑ Museum With No Frontiers, p. 203.
- ↑ Bromiley, p. 362.
- ↑ 3.0 3.1 3.2 Gibb, p. 897.
- ↑ UNESCO, p. 184.
- ↑ Rogan, p. 35.
- ↑ Government of Jordan, Department of Statistics, 1964, pp. 6, 13
- ↑ "SHAMS MA'AN LAUNCHES PRODUCTION PHASE OF THE LARGEST ELECTRICITY GENERATION PROJECT USING PHOTOVOLTAIC CELLS IN JORDAN". Shams Ma'an. October 10, 2016. Archived from the original on 5 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.