மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டு வெடிப்பு நடந்த இடம்.
மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017
Manchester Evening News Arena - geograph.org.uk - 1931437.jpg
மான்செஸ்டர் அரீனா 2010
நேரம் 22:33 ஐக்கிய ராஜிய கோடைகால நேரம் (சர்வதேச நேரம்+0100) [1]
நாள் 22 மே 2017 (2017-05-22)
இடம் மான்செஸ்டர் அரீனா
அமைவிடம் மான்செஸ்டர், ஐக்கிய இராஜ்ஜியம்
புவியியல் ஆள்கூற்று 53°29′10.19″N 2°14′22.80″W / 53.4861639°N 2.2396667°W / 53.4861639; -2.2396667
வகை வெடிகுண்டு
இறப்புகள் 22
காயமுற்றோர் ~59

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மான்செஸ்டர் நகரில் இசைக்கச்சேரி நடந்த மான்செஸ்டர் அரீனா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 59 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்[தொகு]

22 மே, 2017 அன்று உள்ளூர் நேரப்படி 22:33 மணியளவில் 21,000 பார்வையாளர்களைக் கொண்ட இசைக்கச்சேரி முடிந்ததும் நடந்த இத்தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது.[2]

பாதிக்கப்பட்டோர்[தொகு]

இத்தாக்குதலில் பொதுமக்கள் 22 மற்றும் தாக்குதல்தாரி ஒருவர் உட்பட 23 பேர் மரணமடைந்தனர். பொதுமக்களில் குழந்தைகள் உட்பட 59 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்தாரி[தொகு]

இத்தாக்குதலை நடத்தியவர் லிபிய வம்சாவளியைச் சார்ந்த சல்மான் அபிடி (Salman Abedi), 22 வயதுடைய இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். தாக்குதல்தாரி தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்ததின் மூலம் தனியாக இத்தாக்குதலை மேற்கொண்டார் என காவல்துறை தெரிவித்தது.[3]

பின் நிகழ்வுகள்[தொகு]

இக்குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகக் கருதுவதாக காவலர்கள் தெரிவித்தனர். 7 ஜீலை 2005 ம் ஆண்டிற்குப் பின்னர் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் இத்தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.[4][5][6] தாக்குதல் நடந்த இடத்தின் அருகிலுள்ள மான்செஸ்டர் விக்டோரியா தொடருந்து நிலையம் அதன் சேவைகளை ரத்து செய்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் உடனடியாக மூடப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]